blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Friday, November 14, 2014

சங்கக்கார, ஜயவர்தன மீது ஜயசூரிய அதிருப்தி!

mahinda_rajapaksha_jayasuriya[1]அணித் தேர்வு குறித்து இலங்கை அணியின் சிரேஷ்ட வீரர்களான குமார் சங்கக்கார மற்றும் மஹேல ஜயவர்தன கருத்து வெளியிட்டிருப்பது தொடர்பில் இலங்கை தேர்வுக்குழு தலைவர் சனத் ஜயசூரிய அதிருப்தி வெளியிட்டுள்ளார்.

வீரர்களின் கருத்து அணியின் திட்டத்தை அம்பலப்படுத்துவதாகவும் ஜயசூரிய குறிப்பிட்டுள்ளார்.
 
ஜயவர்தன தாம் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்க விரும்புவதாக ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டதோடு இந்தியாவுடனான தொடரின் பாதியிலேயே வெளியேறியதற்கு சங்கக்கார அதிருப்தி வெளியிட்டார்.

கடந்த வெள்ளிக்கிழமை அணித்தலைவர் அன்ஜலோ மத்தியுஸ் மற்றும் பயிற்சியாளர் மார்வன் அத்தபத்தவுடன் ஜயவர்தன மற்றும் சங்கக்காரவையும் தாம் சந்தித்ததாக ஜயசூரிய குறிப்பிட்டார். 

ஆனால் அணித்தேர்வு குறித்த சந்திப்புகளில் இந்த இருவரையும் தவிர்த்துக் கொள்வது குறித்து தாம் அவதானித்து வருவதாக ஜயசூரிய கூறியுள்ளார்.

“இவ்வாறான நிகழ்வுகள் இடம்பெறுவதன் காரணமாக நாம் சந்திப்புகளின்போது அவர்களை தவிர்த்துக் கொள்வது குறித்து ஆலோசித்திருக்கிறோம்” என்று ஜயசூரிய குறிப்பிட்டுள்ளார். “இது ஒரு அபாயகரமான நடத்தையாகும். 

நாம் சந்திப்புகளில் பேசிக்கொண்டவற் றையே அவர்கள் ஊடகத்திற்கு குறிப்பிட்டிருக்கிறார்கள். அவை ஆலோசனைகளே ஒழிய இறுதியானதல்ல. அவர்கள் ஊடகங்களுக்கு சென்று இவை எல்லாம் தமது திட்டம் என்று குறிப்பிட்டால் அது இக்கட்டான சூழலை ஏற்படுத்தும்” என்றும் ஜயசூரிய கூறினார்.
mahinda_rajapaksha_jayasuriya[1]
மஹேல ஜயவர்தன துடுப்பெடுத்தாட வேண்டிய இடம் குறித்து ஆலோசனைக் கூட்டங்களில் கடந்த 18 மாதங்களாக விவாதத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளது. 

இதில் ஜயவர்தனவை முன் வரிசையில் அனுப்பினால் மத்தியவரிசையில் உறுதியற்ற நிலை ஏற்படும் என்பது ஜயசூரியவின் நிலைப்பாடாகும்.

ஆனால் தம்மை முன்வரிசையில் அனுப்பும் படி தொடர்ந்து கேட்டு வருவதாக ஜயவர்தன குறிப்பிடுகிறார். இது குறித்து ஜயவர்தன குறிப்பிடும்போது, “என்னை ஆரம்ப துடுப்பாட்ட வீரராக விளையாட அனுமதிக்கும்படி தேர்வாளர்களிடம் மண்டியிட்டு கேட்க முடியாது. ஆனால் ஆரம்ப வீரர் வரிசை எனக்கு பொருத்தமானது என்று உணர்கிறேன்.

உலக கிண்ணத்தில் அந்த வரிசையில் ஆட வேண்டும் என்று நினைக்கிறேன். அதே நேரத்தில் தேர்வாளர்கள், மத்திய வரிசையில் போதிய அனுபவம் வாய்ந்த துடுப்பாட்ட வீரர்கள் இல்லை. 

எனவே அந்த வரிசையில் நான் ஆட வேண்டும் என்று விரும்புகிறார்கள்.
Mahela-Jayawardene-woe-Sri-Lanka-v-West-Indie_2841622[1]
ஆனால் ஆரம்ப ஆட்டக்காரராக விளையாடிய ஒவ் வொரு முறையும் நிலைத்து நின்று எனது மிகச்சிறந்த ஆட்டத்தை நான் வெளிப்படுத்தியிருக்கிறேன். 

உலக கிண்ணத்திற்கு இன்னும் 3 மாதங்கள் இருப்பதால் என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்” என்று ஜயவர்தன ஊடகங்களுக்கு குறிப்பிட்டிருந்தார்.

மறுபுறத்தில் இந்தியாவுடனான ஒருநாள் தொடரிலிருந்து பாதியில் வெளியேறியது தொடர்பில் சங்கக்கார அதிருப்தி அடைந்துள்ளார். 

அது குறித்து அவர் ஊடகங்களுக்கு குறிப்பிடும்போது, “ஒரு தொடரின் பாதியில் இருந்து குறிப்பாக அணி தோற்று கொண்டிருக்கும் போது யாரும் விலக விரும்பமாட்டார்கள். 

அணி தோல்விகளை சந்திக்கும் போது, ஒன்றாக இணைந்து விளையாடி வெற்றியை ஈட்ட வேண்டும் என்று தான் எப்போதும் விரும்புகிறோம். வெற்றியுடன் விலகுவது பிரச்சினை அல்ல” என்றார்.

இதன்போது அணியில் இணைந்து கொண்டிருக்கும் தினேஷ் சந்திமால் மூன்றாவது வரிசையிலும் லஹிரு திரிமான்ன 6 ஆவது துடுப்பாட்ட வீரராகவும் களமிறங்க வேண்டும் என்று கணித்திருந்தார். 

ஆனால் இவ்வாறான முடிவுகளை தேசிய தேர்வாளர்களே எடுக்க வேண்டும் என்றும் வீரர்களல்ல என்றும் ஜயசூரிய சாடியுள்ளார். 

“வீரர்கள் எமது வேலையைப் பார்த்தால் தேர்வாளர்கள் இருப்பதால் என்ன அர்த்தம்?” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
sanga
“நான் சங்கக்காரவுடன் பேசியிருந்தேன். இந்த முடிவு குறித்து அவர் எதிர்ப்பு வெளியிட்டிருக்கவில்லை. இந்திய சுற்றுப்பயணத்தின் இடையில் சங்கக்கார மற்றும் தம்மிக்க பிரசாத்திற்கு ஓய்வு அளிப்பது குறித்து தேர்வாளர்கள் ஏற்கனவே தீர்மானம் எடுத்திருந்தனர். சங்கக்கார நீண்ட நேரம் விக்கெட் காப்பாளராக இருந்து பின்னர் துடுப்பெடுத்தாட வேண்டும். 

எதிர்வரும் காலத்தில் இங்கிலாந்து மற்றும் நியுஸிலாந்துக்கு எதிராக நீண்ட போட்டித் தொடர் இருக்கிறது. 

எனவே நாம் சிரேஷ்ட வீரர்களை பாதுகாக்க வேண்டும். இதனால் தோல்வி அல்லது இழப்பை பார்க்காமல் நீண்ட அட்டவணைக்கு ஏற்ப நாம் அவரை பாதுகாத்தோம்” என்று ஜயசூரிய குறிப்பிட்டார்.

இதற்கு முன்னரும் ஜயவர்தன மற்றும் சங்கக்கார தொடர்பில் ஜயசூரிய இதேபோன்ற விமர்சனங்களை வெளியிட்டிருந்தார். முன்னதாக தேர்வுக் குழுவினரிடம் குறிப்பிடாமல் இருவரும் இருபது-20 போட்டிகளில் ஓய்வை அறிவித்ததை அடுத்து கடந்த மார்ச்சில் ஜயசூரிய இருவரையும் விமர்சித்திருந்தார்.

No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►