ஆசிரியர்களுக்கான
தேசிய விளையாட்டுப் போட்டியில் கல்முனை அல்-மிஸ்பாஹ் மகா வித்தியாலயத்தின்
உடற்கல்வி ஆசிரியர் ஐ.எல்.எம்.ஜின்னா தங்கப்பதக்கம் பெற்றுள்ளார்.
இதனையிட்டு இவருக்கு கல்முனை பிரதேச மக்களால் பெரும் வரவேற்பு
வழங்கப்பட்டது.
கல்வி
அமைச்சினால் நுவரெலியாவில் இடம்பெற்ற ஆசிரியர்களுக்கான தேசிய விளையாட்டுப்
போட்டியின் 4 x 100 மீட்டர் அஞ்சல் ஓட்டப் போட்டியில் தங்கப்பதக்கத்தையும்,
4 x 400 மீட்டர் அஞ்சல் ஓட்டப்போட்டியில் வெண்கலப்பதக்கத்தையும் இவர்
பெற்று கல்முனை மண்ணுக்கு பெருமை சேர்த்துள்ளார்.
இதனையிட்டு
பதக்கங்கள் வென்ற ஆசிரியர் ஐ.எல்.எம்.ஜின்னா பாடசாலை வளாகத்திலிருந்து
பிரதான வீதி, ஸாஹிறா வீதி மற்றும் கடற்கரை வீதியாக ஊர்வலமாக அழைத்து
வரப்பட்டதுடன் கல்முனை ஸாஹிறாக் கல்லூரியின் அதிபர் உள்ளிட்ட ஆசிரியர்கள்,
மாணவர்கள் வரவேற்றனர்.
இதனைத்
தொடர்ந்து இவருக்கான கௌரவிப்பு நிகழ்வு அல்-மிஸ்பாஹ் மகா வித்தியாலயத்தின
அதிபர் யூ.எல்.எம். அமீன் தலைமையில் பாடசாலை மண்டபத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில்
கல்முனை வலயக் கல்வி பணிமனையின் உடற்கல்விப் பிரதிப் பணிப்பாளர்
எம்.எம்.சத்தர், ஓய்வுபெற்ற சிரேஷ்ட விரிவுரையாளர் எம்.ஐ.எம்.முஸ்தபா,
பிரதி அதிபர் எம்.ஐ.எம். அன்சார் உள்ளிட்ட ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்.
இதன்போது
பதக்கம் வென்ற உடற்கல்வி ஆசிரியர் ஐ.எல்.எம். ஜின்னாவுக்கு பாடசாலை சமூகம்,
அபிவிருத்திக் குழு, பழைய மாணவர் சங்கம் என்பன பொன்னாடை போர்த்தி
கௌரவித்தனர்.
No comments:
Post a Comment
Leave A Reply