
பீகார் மாநிலம் சிதாமர்ஹி மாவட்டத்தில் பாம்பு விழுந்து கிடந்த மதிய உணவை
சாப்பிட்ட மாணவர்கள், உடல்நிலை பாதிக்கப்பட்டதையடுத்து மருத்துவமனையில்
சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.
அம்மாவட்டத்தின் சுராசந்த் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலரான வினோத்குமார்
இச்சம்பவம் பற்றி கூறுகையில், "மேக்பூர் நடுநிலைப்பள்ளியில் மதிய
உணவருந்திய 54 மாணவர்களுக்கு குமட்டலும், மயக்கமும் ஏற்பட்டது. உடனடியாக
மருத்துவனையில் சேர்க்கப்பட்ட அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு
வருகிறது. இதனால் யாருடைய உயிருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை" என்று
தெரிவித்தார்.
மேலும் அவர்களுக்கு வழங்கப்பட்ட கிச்சடியை தாங்கள் கைப்பற்றியுள்ளதாக கூறிய
அவர், அதில் கருப்பு நிற நீண்ட ஜந்து ஒன்று இருந்ததை கண்டதாக
தெரிவித்தார். அது பாம்பாக இருக்கக்கூடும் என்று தாங்கள் சந்தேகிப்பதாக
தெரிவித்த அவர் அவற்றின் மாதிரியை சோதனைக்காக அனுப்பியுள்ளதாகவும்
கூறினார்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
No comments:
Post a Comment
Leave A Reply