சச்சின்
டெண்டுல்கர் யார் என்று கேட்டு சர்ச்சைக்குள்ளானார் மரியா ஷரபோவா, இந்த
நிலையில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மத்தியில் சச்சின் தங்களுக்கு யார்
என்பதை காட்டியுள்ளார் இந்திய வீரர் யுவராஜ் சிங்.லண்டன் லோர்ட்ஸ் மைதானத்தில் நடந்த எம்சிசி மற்றும் ரெஸ்ட் ஒப் தி வேர்ல்ட் அணிகளுக்கு இடையிலான காட்சிப் போட்டியின்போது சச்சின் காலைத் தொட்டு வணங்கி சலசலப்பை ஏற்படுத்தினார் யுவராஜ் சிங்.
யுவராஜுக்கு தொடர்ந்தும் ஆதரவைத் தந்து வருகிறார் சச்சின். சமீபத்தில் 2015 உலகக் கிண்ண போட்டியின்போது யுவராஜ் சிங் முக்கிய வீரராக ஜொலிப்பார் என்று கூறியிருந்தார்.
உலகப் புகழ் பெற்ற லோர்ட்ஸ் மைதானத்தில் திடீரென சச்சின் காலைத் தொட்டு யுவராஜ் வணங்கியது ஏன் என்று இதுவரை தெரியவரவில்லை, ஒரு வேளை சச்சின் யார் என்று கேட்ட மரியா ஷரபோவாவுக்கு இப்படி மறைமுகமாக யுவராஜ் சிங் பதில் கொடுத்தாரா என்ற வீயூகத்தில் பலர் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.
சச்சினை ஒருமுறை தனது தாத்தா போன்றவர் என்று கூறியிருந்தார் யுவராஜ். அதேபோல கடவுள் என்றும் அழைத்துள்ளார்.
தனது குரு என்றும் கூறி வருபவர் யுவராஜ் சிங் என்பதும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment
Leave A Reply