
இவர்கள் அனைவரும் இந்திய வெளிவிவகார அமைச்சின் ஏற்பாட்டின் பேரில் ஈராக்கிலுள்ள இந்திய தூதரகத்தினூடாக இன்று அதிகாலை டெல்லி வந்தடைந்ததாக இந்திய ஊடங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் கிளர்ச்சியாளர்களினால் கடத்தப்பட்ட 46 இந்திய தாதியர்களும் விடுவிக்கப்பட்டு நேற்று இந்தியா வந்தடைந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் ஈராக்கில் மோதல்களுக்கு மத்தியில் வாழந்து வரும் ஏனைய பிரஜைகளையும் பாதுகாப்பாக அழைத்து வருவதற்கான நடவடிக்கைள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக இந்திய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதனையடுத்து இன்னும் சில தினங்களில் சுமார் 600 இந்திய பிரஜைகள் நாடு திரும்புவார்கள் என எதிர்பாரக்கப்படுவதாகவும் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
No comments:
Post a Comment
Leave A Reply