உலகக்
கிண்ண கால்பந்தாட்ட தொடரின் முதலாவது காலிறுதிப் போட்டியில்
உபாதைக்குள்ளான நெய்மர் விரைவில் குணமடைய வேண்டுமென தாம் பிரார்த்திப்பதாக
கொலம்பிய அணியின் ஜுவான் சுனிகா தெரிவித்துள்ளார்.நேற்று முன்தினம் நடைபெற்ற போட்டியில் தாம் வேண்டுமென்றே நெய்மரை கீழே வீழத்தவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
போட்டிகளில் இவ்வாறான சம்பவங்கள் வழமையாக நிகழ்கின்ற போதிலும் தம்மால் இழைக்கப்பட்ட தவறுக்காக மனம் வருந்துவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும் சுனிகா திட்டமிட்டே நெய்மரை உபாதைக்குள்ளாக்கியதாக சில ஊடகங்களும் பிரபல வீரர்களும் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment
Leave A Reply