
கைவிலங்கு போடப்பட்டிருந்த நிலையில் சந்தேகநபர் ஆற்றில் பாய்ந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
சந்தேகநபர் ஆற்றில் பாய்ந்த பின்னர் பொலிஸாரும் ஆற்றில் பாய்ந்த போதும் அவரை பிடிக்க முடியாமல் போனதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
தப்பி சென்றுள்ள சந்தேகநபர் கையடக்க தொலைபேசி , வெளிநாட்டு கடவுச் சீட்டு திருட்டுச் சம்பவம் மற்றும் பல கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடையவர் என பொலிஸார் கூறினர்.
கொள்ளையுடப்பட்ட பொருட்களை மீட்பதற்காக தலுகம பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது சந்தேகநபர் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment
Leave A Reply