
கலிபோர்னியாவில் கடந்த செவ்வாய்க்கிழமை
ஒரு நடுத்தர வயது பெண் சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது அவர்
மீது சந்தேகம் கொண்ட நெடுஞ்சாலை காவல்துறை அதிகாரி அந்த பெண்ணை நிற்க
சொன்னார்.

ஆனால்
அந்த பெண் நிற்காமல் தொடர்ந்து நடந்து சென்றுகொண்டிருந்ததால் ஆத்திரமடைந்த
காவல்துறை அதிகாரி மிகவேகமாக அவருடைய பின்னால் சென்று அந்த பெண்ணை கீழே
தள்ளி அவருடைய முகத்தில் மிகக்கடுமையாக தாக்கினார். தனது கைகளால் காவல்துறை
அதிகாரியின் தாக்குதலை தடுக்க முயற்சி செய்தும் பெண்ணின் முகத்தில் ரத்தம்
கொட்டியது.
இந்த தாக்குதலை தற்செயலாக காரில் சென்றுகொண்டிருந்த ஒருவர் பார்த்து
தனது மொபைல்போன் மூலம் வீடியோ எடுத்தார்.
இந்த வீடியோ இணையத்தில் பதிவு
செய்யப்பட்டவுடன் கலிபோர்னியாவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. காவல்துறை
அதிகாரி மீது கடும் நடவடிக்கை எடுக்க பெண்கள் அமைப்புகள் கோரிக்கை
விடுத்தன.
பெண் மீது சந்தேகம் இருந்தால் அவரை கைது
செய்து முறைப்படி விசாரணை நடத்தாமல் இப்படி மிருகத்தனமாக ஒரு காவல்துறை
அதிகாரி நடந்துகொண்டதை பொறுத்துக்கொள்ள முடியாது என்று பெண்கள் அமைப்புகள்
கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
No comments:
Post a Comment
Leave A Reply