blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Sunday, July 6, 2014

புதுப் பொலிவு பெறும் பதுளை நகரம் (Photos)

பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் கீழ் செயற்பட்டு வரும் நகர அபிவிருத்தி அதிகாரசபையினால் கொழும்பு நகரின் அபிவிருத்தி மற்றும் கொழும்பு நகரை நவீனமயப்படுத்தும் திட்டங்கள் பாரியளவில் மேற் கொள்ளப்பட்டு வருகின்றன. 

அதுமட்டுமின்றி இத்திட்டங்கள் கொழும்பு நகருடன் மட்டும் நிறைவு பெறாமல் நாட்டின் ஏனைய பகுதிகளிலுள்ள நகரங்களையும் அபிவிருத்தி செய்வதற்கான செயற்பாடுகளும் முன்னெடுக்கப்படுகின்றன.
நாட்டின் மலையக பிரதேசமான பதுள்ளை நகரம் பெருந்தொகையான உள் நாட்டு மற்றும் வெளி நாட்டு சுற்றுளா பயணிகள் வருகை தரும் ரம்யமான ஒரு நகரமாகும். 

ஆனால் கடந்த காலங்களில் பதுளை வின்சன்ற் டயஸ் மைதானத்தில் குவிக்கப்பட்டிருந்த 58 ஆயிரம் கன மீற்றர் அளவான குப்பைக் கூளங்களினால் சுற்றுளா பயணிகளும் பிரதேச வாசிகளும் பாரிய அசௌகரியங்களை எதிர் நோக்கி வந்ததுடன் இவற்றை அகற்றுவதற்கான எந்த நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை.
இதற்கமைய 2012 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 09 ஆம் திகதி இடம் பெற்ற மாவட்ட அபிவிருத்தி மீளாய்வின் போது இது தொடர்பாக கலந்துரையாடப் பட்டதுடன் இப்பிரதேசத்திலுள்ள குப்பை கூளங்களை அகற்றுவதற்கான வேலைத் திட்டமொன்றை மேற்கொள்ளவும் முடிவெடுக்கப்பட்டது. 

இதற்கமைய நகர அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் கட்டட ஆராய்ச்சி நிலையம் ஆகியன இணைந்து பதுள்ளை நகருக்கு தொலைவில் காணப்படும் சொரதாதொட்ட பிரதேச சபைக்கு உட்பட்ட கந்தேகெதர சார்தியா தோட்டத்திற்கு இராணுவ சேவையாளர்களின் உதவியுடன் இராணுவ பார ஊர்திகளில் மூலம் இக்குப்பைகளை அகற்றுவதற்கான வேலைத்திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டது. 

இத்தோட்டத்தில் பாரியளவிலான ஒரு கிடங்கு வெட்டப்பட்டு பார ஊர்திகளின் மூலம் 5650 லோட் குப்பை கூளங்கள் இக்கிடங்கில் கொட்டப்பட்டு முழுமையாக மூடப்பட்டுள்ளது.
மேலும் பாரிய அளவிலான இக்குப்பை கூளங்கள் அகற்றப்பட்டதன் பின்னர் வின்சன்ற் டயஸ் மைதானம் மற்றும் பதுள்ளை நகரில் காணப்படும் முக்கிய பிரதேசங்களை மீள் நிர்மாணம் செய்தவதுடன் நகரை மேலும் அபிவிருத்தி செய்து எழில் மிகு சுற்றுளா பிரதேசமாக மாற்றுவதற்கான அபிவிருத்தி பணிகள் நகர அபிவிருத்தி அதிகாரசபையினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

மேலும் இத்திட்டதின் மூலம் வின்சன்ற் டயஸ் மைதானம் முழுமை பெற்ற கால்பந்து மைதானமாக நிர்மானிக்கப்படவுள்ளது.
ஊவா பிரதேசத்தில் குவிக்கப்படும் இக்குப்பை கூளங்களை உபயோகித்து இப்பிரதேசத்திற்கு தேவையான மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன.

No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►