எமது தளத்தை பார்வையிட்டோர்
Saturday, July 5, 2014
விராட் கோஹ்லியை துரத்தும் வீராங்கனை
விராட் கோஹ்லியை திருமணம் செய்துகொள்வதே லட்சியமாக சுற்றிக்கொண்டிருக்கிறார் இங்கிலாந்து பெண் கிரிக்கெட் அணியின் வீராங்கனை டேனியலே யாட்.
வங்கதேசத்தில் இவ்வாண்டு நடைபெற்ற ஐசிசி டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் அரையிறுதியில் தென் ஆப்பிரிக்காவை மண்ணை கவ்வ செய்யும் வகையில் கோஹ்லி 44 பந்துகளில் 72 ரன்களை குவித்தார்.
இந்த போட்டியை டிவியில் பார்த்த இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணியின் வீராங்கனை டேனியல்லே யாட், அன்றே தனது டிவிட்டர் பக்கத்தில், "கோஹ்லி என்னை திருமணம் செய்துகொள்ளுங்கள்" என்று டிவிட் செய்திருந்தார்.
இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணியின் அதிரடி வீராங்கனை டேனியல் யாட், தனது அணிக்காக 32 ஒரு நாள் சர்வதேச போட்டிகள் மற்றும் 50 டிவென்டி 20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.
எனவே, இதை ஏதோ ஜாலியாக செய்திருப்பார் என்று ரசிகர்கள் நினைத்திருந்தால், அம்மணி உண்மையிலேயே ஆழ் மனதில் அந்த எண்ணித்திலேயே சுற்றிக் கொண்டிருக்கிறாராம்.
தற்போது இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் தற்போது சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அங்கு, ஜூலை 1 முதல் 3ம்தேதிவரை நடைபெற்ற பயிற்சி ஆட்டத்தின்போது மைதானத்துக்கே சென்ற டேனியலே, அங்கு கோஹ்லியுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளார்.
அந்த படத்தை டிவிட்டரிலும் வெளியிட்டுள்ள வீராங்கனையின் சகோதரர் மேக்ஸ், "இவர்கள் ஒரு சிறந்த ஜோடியாக இருப்பார்கள். ஹா..ஹா.." என்று டிவிட் செய்துள்ளார்.
இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணியின் அதிரடி வீராங்கனை டேனியல் யாட். 22 வயதேயான கவர்ச்சி வீராங்கனையான இவர், இங்கிலாந்து அணிக்காக 32 ஒரு நாள் சர்வதேச போட்டிகள் மற்றும் 50 டிவென்டி 20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
கடந்த பெப். 4ம் திகதி இடம்பெற்ற சுதந்திர தின நிகழ்வின் போது ஜனாதிபதி மைத்திாியையும் , ஏனைய அரசியல் பிரமுகா்களையும் கொலை செய்வதற்கு சதித் திட...
-
வவுனியா நெடுங்கேணி வன பகுதியில் மேற்கொண்ட தேடுதலின் பின்னர் 3 சடலங்கள் மீட்கப்பட்டது. அதில் கோபி, தேவியன் இருவரின் சடலங்கள் கண்டற...
-
யாழ்ப்பாணத்திலிருந்து சொகுசு பஸ் ஒன்றில் கேரளா கஞ்சாவை கொழும்புக்கு கொண்டுவர முயற்சித்தபோது கனகராயன்குளம் பகுதியில் கைது செய்யப்பட்ட மூன்...
-
யாழ்.குடாநாட்டில் மர்மமான முறையில் மீட்கப்பட்ட ஆளில்லாவிமானம் வர்த்தக நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்பட்டுள்ளது எனவும...

No comments:
Post a Comment
Leave A Reply