கொழும்பு
12 மற்றும் கொழும்பு 15 ஆகிய பிரதேசங்களுக்கு இன்றிரவு 8 மணிமுதல் நாளை
அதிகாலை 6 மணி வரை 10 மணித்தியாலங்கள் நீர்விநியோகம் தடைப்படும் என தேசிய
நீர்வழங்கல், வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.இதற்கமைய மட்டக்குளி, கொட்டாஞ்சேனை, முகத்துவாரம், மாதம்பிட்டி, மஹவத்தை, ஜோர்ஜ் ஆர்.டி. சில்வா மாவத்தை, கோட்டை பகுதி, மகா வித்தியாலய மாவத்தை, மத்திய வீதி, ஆட்டுப்பட்டித் தெரு, ஜிந்துப்பிட்டி, வூல்ஃபெண்டால் மாவத்தை, இந்து அப்புஹாமி மாவத்தை, விவேகானந்த மேடு ஆகிய பகுதிகளில் நீர் விநியோகம் தடைப்படவுள்ளது.
பாரிய கொழும்பு நீர் விநியோகத் திட்டத்தின் கீழ், நீர்குழாய் பொருத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதன் காரணமாக குறிப்பிட்ட பகுதிகளுக்கான நீர்விநியோகம் இடைநிறுத்தப்படுவதாக தேசிய நீர்வழங்கல், வடிகாலமைப்பு சபை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
Leave A Reply