
அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் இந்தப் பிரச்சினையைத் தீர்க்க போராடி வருகின்றன. இந்த இயக்கத்துடன் தொடர்பு கொண்டுள்ளதாக பிரிட்டிஷ் குடியுரிமை பெற்றுள்ள மூன்று பேரின் தகவல் வெளிவந்துள்ளது. கார்டிப் பகுதியைச் சேர்ந்த நாசர் முத்தானா, ரியாத் கான் மற்றும் அபர்டீன் பகுதியைச் சேர்ந்த ரு{ஹல் அமின் ஆகியோர் ஐஎஸ்ஐஎல் இயக்கத்தில் இணைந்துள்ளதாகக் கூறப்படுகின்றது.
20 வயது மாணவனான முத்தானா கடந்த மாதம் முஸ்லிம் இளைஞர்களை ஐஎஸ்ஐஎல் இயக்கத்தில் சேரும்படி வெளியான ஒரு அறிவிப்பில் தோன்றினான் என்று அவனது தந்தை அஹமது முத்தானா பிபிசி செய்தியாளரிடம் தெரிவித்துள்ளார்.
முத்தானாவின் பள்ளி நண்பனான கானும், அமினுடன் இணைந்து ஐஎஸ்ஐஎல் வெளியிட்டுள்ள வீடியோவில் தென்பட்டதாகக் கூறப்படுகின்றது. இவர்களில் அமினுக்கு வங்காள தேசத்தின் குடியுரிமையும் உள்ளது. இதனை முன்னிட்டு இம்மூவரின் சொத்துகளை முடக்கி வைப்பதாக பிரிட்டிஷ் அரசாங்கம் நேற்று அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment
Leave A Reply