தகவல் எஸ்.எம் மொஹமட் சஜான், செக்றோ ஸ்ரீலங்கா நிறுவனத்தின் ஸ்தாபகத் தலைவரும் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் கிழக்கு மாகாணத்திற்கான பணிப்பாளருமான உளவள ஆலோசகர் றினோஸ் ஹனீபா இளம் கண்டு பிடிப்பாளர் வினோஜ் குமாரை தனது இல்லத்தில் சந்தித்து பணப்பரிசும் கொடுத்து கௌரவப்படுத்தினார்.
தொடர்ந்தும் "கல்வி கற்றவர்களுக்குள் சிறந்த கல்விமானாக வர வேண்டும் என்றும் அம்பாறை மாவட்டத்திற்கே உங்களால் பாராட்டுக்களும் புகழும் கிடைத்திருக்கின்றது" என குறிப்பிட்டதுடன் இவரைப் போன்று எம்மை தகமைப்படுத்திக் கொள்ள வேண்டும் அல்லது இவ்வாரானவர்களுக்கு எம்மால் இயன்ற உதவிகளைச் செய்ய வேண்டும் வீணாக புறம் பேசி பக்குவமற்று காலத்தை வீணடிப்பதில் எந்த பயனும் இல்லை கற்றவர்கள் என்றால் அதற்கு அர்த்தம் இருக்க வேண்டும் அதன் விளைவுகளை சமூகம் காண வேண்டும். ஆக்கவூர்வமாக சிந்தித்து சமூகத்தை வழிநடாத்த முன்வர வேண்டும் என்றார்.
அகில இலங்கை ரீதியாக 50 இளம் கண்டு பிடிப்பாளரை தெரிவு செய்யும் போட்டியினை இலங்கை பொறியியலாளர் நிறுவாகம் அண்மையில் நடாத்தியது இதில் அம்மாறை மாவட்டத்தை சேர்ந்தவரும் சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மகா வித்தியாலயத்தில் பொறியியல் தொழில் நுட்ப பிரிவில் கற்கும் சம்மாந்துறை கோறைக்கல்லைச் சேர்ந்த சோம சுந்தரம் வினோஜ் குமார் கலந்து கொண்டதுடன் அவருடைய நான்கு புதிய கண்டுபிடிப்புக்களான தன்னியக்கத் தாலாட்டும் கருவி, வாகான புகையைச் சுத்தப்படுத்தி மின் உற்பத்தி செய்யும் கருவி, எல்.பி.டப்ளியு வை இலகுவாக கண்டு பிடிக்கும் கருவி ஆகிய நான்கும் இப்போட்டியில் தேரந்தெடுக்கப்பட்டுள்ளன.
இவ்வருடத்திற்கான சிறந்த கண்டுபிடிப்பாளர்களை தெரிவு செய்யும் போட்டிக்கு இவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் இப்போட்டியானது 10,11,12 ஆம் திகதி கொழும்பு பண்டாரநாயக்க ஞபகாத்த மண்டபத்தில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment
Leave A Reply