
40 ஆண்டுகளுக்கு முன்பு நிர்மாணிக்கப்பட்ட இராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுக பாலத்தை சீரமைக்க மீனவ அமைப்புகள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்த நிலையில் மீன்துறை இணை இயக்குநர், தூத்துகுடி துறைமுக செயற்பொறியாளர் மற்றும் கடல்சார் அதிகாரிகள் தலைமையிலான குழு நேற்று இராமேஸ்வரம் மீனவ பிரதிநிதிகளிடம் ஆலோசனை நடத்தியது.

இதன் போது தொடர்சியாக இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்களும் படகுகளும் சிறைபிடிக்கப்பட்டு வருவது தங்களது வாழ்வாதாரத்தை பாதித்துள்ளதால் அரசு துரித நடவடிக்கை எடுத்து இலங்கையிலுள்ள படகுளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், பாரம்பரிய கடல் பகுதியல் மீன்பிடிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மீனவர்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
No comments:
Post a Comment
Leave A Reply