
விடைத்தாள் திருத்தும் பணிகள் எதிர்வரும் 27 ஆம் திகதி நிறைவுபெறவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய விடைத்தாள் திருத்தும் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ள ஆறு பாடசாலைகளுக்கு நாளை தொடக்கம் விடுமுறை வழங்கப்படவுள்ளதாக பிரதி பரீட்சைகள் ஆணையாளர் எஸ். பிரணவதாசன் குறிப்பிடுகின்றார்.
இதேவேளை, ஊவா மாகாண சபைத் தேர்தல் காரணமாக பதுளை மாவட்டத்திற்கான உயர்தர பரீட்சைக்குரிய இரண்டாம் கட்ட விடைத்தாள் திருத்தும் பணிகள் பிற்போடப்பட்டுள்ளன.
அதற்கமைய, பதுளை மாவட்டத்தில் இரண்டாம் கட்ட விடைத்தாள் திருத்தும் பணிகள் எதிர்வரும் 24 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என பிரதி பரீட்சைகள் ஆணையாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.
No comments:
Post a Comment
Leave A Reply