
ஜப்பானில் ”சக்கட்சு ஃபெஸ்டா” (Shukatsu Festa ) என்ற உயிருடன் சவப்பெட்டியில் அடைத்து கொண்டாடும் திருவிழாவிற்கு மக்கள் கூட்டம் அலைமோதியுள்ளது.
வருடந்தோறும் 5000க்கும் மேற்பட்ட மக்கள் வருவதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் தெரிவித்துள்ளார்.
50க்கும் மேற்பட்ட சவப்பெட்டி நிறுவனங்கள் கலந்து கொண்ட இந்த திருவிழாவில், யார் இறுதி சடங்கை நன்றாக செய்கிறார்கள் என்ற போட்டி நடைபெற்றது.

இதில் மக்கள் தங்களுக்கு தேவையான சவப்பெட்டியை தெரிவு செய்துகொண்டு, ஆடை மற்றும் அலங்காரம் செய்து கொண்டு சவப்பெட்டியின் உள்ளே அடைத்து புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளனர்.

முதியவர்கள் அதிகமாக வாழ்ந்து வரும் ஜப்பான் நாட்டில் இது போன்ற திருவிழாக்கள் நடத்துவது சிறப்பாக உள்ளதாக பலர் கருத்துக்கள் வெளியிட்டுள்ளனர்.

ஜப்பான் தொடர்ந்து மூன்று வருடங்களாக உலகில் அதிக முதியவர்கள் உள்ள நாடாக தெரிவு செய்யப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment
Leave A Reply