கனடா நாட்டைச் சேர்ந்த ஜோர்ஜ் கவுராவ்னிஸ், வானாட்டு தீவில் உள்ள எரிமலைக்குள் 1,200 அடி ஆழம் வரை இறங்கி எரிமலைக் குழம்பின் பின்னணியில் தன்னைத்தானே (‘செல்ஃபி’) படம் எடுத்து வெளியிட்டுள்ளார்.
இது இணைய தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தெற்கு பசிபிக் கடலில் உள்ள வானாட்டு நாட்டின் அம்பிரிம் தீவில் மரும் எரிமலைக்குள் ஜோர்ஜ் கவுராவ்னிஸ், சாம் கோஸ்மேன் ஆகியோர் கடந்த சில நாட்களுக்கு முன்பு இறங்கினர். அவர்களுக்கு ஜியாஃப் மேக்லே, பிராட் அம்புரோஸ் ஆகியோர் வழிகாட்டிகளாக செயல்பட்டனர்.
கடும் வெப்பத்திலிருந்து தங்களை காத்துக்கொள்வதற்கான பிரத்யேக ஆடைகளை அவர்கள் அணிந்திருந்தனர்.
மரும் எரிமலையில் 1,200 அடி வரை ஜார்ஜ் கவுராவ்னிஸ் இறங்கினார். அங்கிருந்தபடி ‘செல்ஃபி’ புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
ஏரியில் நீர் நிரம்பி இருப்பது போன்று அந்த எரிமலையின் அடி ஆழத்தில் எரிமலைக் குழம்பு அலை அலையாக சீறிக் கொண்டிருந்தது.
“எரிமலைக்குள் கடும் வெப்பத்தை சமாளித்து நின்றோம். எரிமலைக் குழம்பிலிருந்து என் மீது அமிலம் விழுந்ததில், உடை சிறிது சேதமடைந்துவிட்டது.
வெப்பம் தாங்காமல் கேமராவின் ஒரு பகுதியும் சேதமடைந்துவிட்டது” என்று ட்விட்டர் இணையதளத்தில் ஜோர்ஜ் கவுராவ்னிஸ் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment
Leave A Reply