அனைத்து இலங்கையரதும் நலனுக்காக ஐ.நா. மனித உரிமைகள் அலுவலகத்தின் விசாரணைச் செயற்பாட்டுடனும், ஐ.நாவின் விசேட ஆணையாளர்களுடனும் முழுமையான ஒத்துழைப்புடன் இலங்கை செயற்படவேண்டும் என்று ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் சையித் அல் ஹுசைன் கோரிக்கை விடுத்துள்ளார்.
நாளை புதன்கிழமை ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸிலில் வெளியிடப்படவுள்ள வாய்மூல நீண்ட அறிக்கை நேற்றைய தினமே மனித உரிமை பேரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையில் இலங்கை விவகாரம் குறித்த விசாரணைகள் தொடர்பான விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.
அதில், இலங்கையின் சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் குறைத்து மதிப்பிடத்தக்க வகையில் இடம்பெறும் முஸ்லிம் மற்றும் சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறைகளை முடிவுக்குக் கொண்டுவரவேண்டும்.
கடந்த காலத்தை ஏற்றுக்கொள்வதற்கும், தண்டனையிலிருந்து விலக்களிக்கப்படுதலை முடிவுக்குக் கொண்டு வருவதற்கும், சமூகங்கள் மத்தியில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துதல் மற்றும் சட்டத்தின் ஆட்சியை நடைமுறைப்படுத்துதல் என்பனவற்றுக்கும் பொறுப்புக்கூறுதல் மிக அவசியமானது.
இலங்கை அரசு, மனித உரிமைகள் கவுன்ஸிலிலல் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை நிராகரித்தல் மற்றும் விசாரணைகளுக்கு ஒத்துழைக்க மறுத்தல் போன்ற விடயங்கள் குறித்து தான் ஆழ்ந்த கவலைகொண்டுள்ளார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
எமது தளத்தை பார்வையிட்டோர்
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
காலி – கிங்தோட்டை பகுதியிலுள்ள கைத்தொழிற்சாலையொன்றில் ஒருவர் கொலைசெய்யப்பட்டுள்ளார்.
-
கூலிக்காக வர்ணம் (பெயின்ற்) பூசச் சென்ற இளைஞர் ஒருவர் அந்த வீட்டிலிருந்த மூன்று பவுண் எடை கொண்ட சங்கிலியை திருடிய சம்பவம் ஒன்று அண்மையில்...
-
பிரதான போதைப்பொருள் கடத்தல் குழுவொன்றின் தலைவர் மெக்ஸகோவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
-
இந்திய, கர்நாடக மாநிலத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 15 பேர் உயிரிழந்துள்ளனர்.
No comments:
Post a Comment
Leave A Reply