பெண்ணொருவர், தனது மகள் 18 வயதை அடையும் முன்பே அவரை கட்டாயப்படுத்தி
சுமார் 2 ஆயிரம் ஆண்களுடன் உறவுகொள்ள வைத்த கொடூர சம்பவம் வட இங்கிலாந்தில்
இடம்பெற்றுள்ளது.
ஜக்குலின் மார்லிங்க் என்ற பெண்ணே இத்தகைய கொடூர செயற்பாட்டில் தனது மகளான ஆனாபெல்லை ஈடுபடுத்தியுள்ளார்.
ஜக்குலின் மார்லிங் பாலியல் குழுவொன்றுக்கு தனது மகளை அடிமையாக்கியுள்ளார்.
ஆனாபெல்(48) தற்போது இங்கிலாந்தில் வசித்து வருகிறார். இவர், 'தி டெவில்
ஆன் தி டோர்ஸ்டெப்: மை எஸ்கேப் ஃப்ரம் எ சேட்டனிக் செக்ஸ் கல்ட் என்ற தனது
வாழ்க்கை வரலாற்றை புத்தகமாக எழுதியுள்ளார்.
தனக்கு நேர்ந்த கொடூர சம்பவங்களை அவர் அந்த புத்தகத்தில் பதிவு செய்துள்ளார்.
பாலியல் வழிபாட்டு குழுவின் தலைவர் கொலின் பேட்லியுடன் ஜாக்குலின் மார்லிங்
உறவு கொள்வதை 7 வயதில் ஆனாபெல் கட்டாயப்படுத்தலின் கீழ் பார்த்துள்ளார்.
ஆனாவுக்கு 11 வயது இருக்கையில் பேட்லி அவரை 2 முறை வல்லுறவுக்குட்படுத்தியுள்ளார்.
ஆனாவுக்கு 13 வயது இருக்கையில் அவரை அவரது இல்லத்தில் நடந்த கூட்டாக உறவு
கொள்ளும் செயற்பாட்டில் வலுக்கட்டாயமாக பங்கேற்க வைத்துள்ளனர்.
பேட்லி, ஆனாவை முதல் முறை வல்லுறவுக்குட்படுத்தும்போது 'இதற்கு
சம்மதிக்கவில்லை என்றால் நீ நரகத்திற்கு செல்வாய்' என்று கூறி
மிரட்டியுள்ளார்.
அந்த பாலியல் குழுவுக்கு பணம் சம்பாதித்து கொடுக்க ஆனா போன்ற சிறுமிகள் கட்டாயப்படுத்தி விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
'பகலில் பாடசாலை மாணவியாகவும் இரவில் பாலியல் அடிமையாகவும் இருந்தேன். ஒரு
கட்டத்தில் அதை பொறுத்துக்கொள்ள முடியாமல் தற்கொலைக்கும் முயன்றேன்' என்று
ஆனாபெல் தெரிவித்துள்ளார்.
17 வயதில் கர்ப்பமான ஆனா குழந்தையை பெற்ற பிறகு யாருக்கும் தெரியாமல் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.
இவரது பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்பட்ட விடயம் நீதிமன்றத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.
இவ்வழக்கில், பேட்லிக்கு 11 ஆண்டுகளும் ஜாக்குலினுக்கு 12 ஆண்டுகளும் சிறை
தண்டனை விதிக்கப்பட்டது. தற்போது ஆனா இங்கிலாந்தில் வாழ்ந்து வருகிறார்.
எமது தளத்தை பார்வையிட்டோர்
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
காலி – கிங்தோட்டை பகுதியிலுள்ள கைத்தொழிற்சாலையொன்றில் ஒருவர் கொலைசெய்யப்பட்டுள்ளார்.
-
கூலிக்காக வர்ணம் (பெயின்ற்) பூசச் சென்ற இளைஞர் ஒருவர் அந்த வீட்டிலிருந்த மூன்று பவுண் எடை கொண்ட சங்கிலியை திருடிய சம்பவம் ஒன்று அண்மையில்...
-
பிரதான போதைப்பொருள் கடத்தல் குழுவொன்றின் தலைவர் மெக்ஸகோவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
-
இந்திய, கர்நாடக மாநிலத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 15 பேர் உயிரிழந்துள்ளனர்.
No comments:
Post a Comment
Leave A Reply