blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Tuesday, September 23, 2014

பயனாளர்களிடம் கட்டணம் அறவிடப் போகிறதா பேஸ்புக்?

பயனாளர்களிடம் கட்டணம் அறவிடப் போகிறதா பேஸ்புக்?சமூக வலைத்தளமான பேஸ்புக்கின் பயனாளர்கள் கட்டணம் செலுத்த வேண்டுமென ‘நெஷனல் ரிப்போர்ட்’ (National Report) என்ற இணையத்தளத்தில்  வெளியான செய்தி பொய்யானது என பேஸ்புக் நிறுவனம் அறிவித்துள்ளது.

எதிர்வரும் நவம்பர் முதலாம் திகதியிருந்து பயனாளர்கள் 2.99 அமெரிக்க  டொலர்களை செலுத்தி பேஸ்புக்கை பயன்படுத்தலாம் எனவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் இது பொய்யான தகவல் என செய்திகள் வெளியாகியுள்ளன.

நீண்ட கலந்துரையாடலின் பின்னர் பேஸ்புக் தளத்தின் ஸ்தாபகர் மார்க் சக்கர்பேக் பயன்பாட்டாளர்களிடம் கட்டணம் அறவிடுதல் தொடர்பில் தீர்மானித்ததாகவும் அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டிருந்தது. எனினும் இதனை பேஸ்புக் நிறுவனம் மறுத்துள்ளது.

இதேவேளை, ஏனைய பதிவுகளிலிருந்து தனித்துவமாக தெரியும் வகையில் கட்டுரைகளுக்கென்று புதிய டெக்குகளை பேஸ்புக் அறிமுகப்படுத்தியுள்ளது.

கட்டுரைகளுக்கு புதிய வழிமுறையை தோற்றுவிக்க வேண்டும் என பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட கருத்துகளின் அடிப்படையில் இந்த முயற்சி எடுக்கப்பட்டுள்ளதாக பேஸ்புக் நிறுவன பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►