கிளிநொச்சி வைத்தியசாலையில் பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவத்தில் சந்தேகம் உள்ளதாக அவரது உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.வைத்தியசாலையின் முறையற்ற பராமறிப்பபே இதற்கு காரணம் என அவரது உறவினர்கள் கூறுகின்றனர்.
கிளிநொச்சி பரந்தன் குமரபுரம் பகுதியைச் சேர்ந்த 32 வயதான பெண் ஒருவர் கடந்த 20 ஆம் திகதி கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் அவர் நேற்று முன்தினம் வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.
எனினும் இந்த மரணத்தில் தமக்கு சந்தேகம் நிலவுவதாக அவரது உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை குறித்த பெண்ணின் மரணம் தொடர்பில் யாழ்ப்பாணத்தில் இருந்து எட்டுப் பேர் அடங்கிய மருத்துவ குழாம் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது.
பெண்ணின் மரணத்திற்கான காரணம் தொடர்பில் தொடர்ந்தும் ஆராய்ந்து வருவதாக அந்தக் குழுவில் உள்ள யாழ். போதான வைத்தியசாலையின் சட்ட வைத்திய நிபுணர் உருந்திர பசுபதி மயூரன் தெரிவித்தார்.
குறித்த பெண் நுரையீரல் பாதிப்பிற்கு உள்ளாகியிருந்ததாகவும், மரணம் தொடர்பிலான அறிக்கை மூன்று வாரத்திற்குள் கிடைக்கும் எனவும் எனவும் அவர் கூறினார்.
No comments:
Post a Comment
Leave A Reply