இந்த சம்பவம் இன்றைய சிங்கள நாளிதழ்கள் பலவற்றிலும் பிரதான செய்திகளாக வெளியாகியுள்ளது.
1998ம் ஆண்டு 43 கிராம் எடையுடைய போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டிருந்தார்.
இது தொடர்பிலான வழக்கு விசாரணைகளில் இரண்டு பிள்ளைகளின் தாயான கருப்பையா பூங்கொடி குற்றவாளி என கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்மானித்தது.
இதன்படி, 2005ம் ஆண்டு மேல் நீதிமன்ற நீதவான் ஆயுள் தண்டனை விதித்திருந்தார். அதனால் ஒன்பது ஆண்டுகளாக சிறைத்தண்டனை அனுபவித்து வந்துள்ளார்.
இந்த நிலையில் நீதிமன்ற நடவடிக்கைகளின் குறைபாடுகளினால் இந்தப் பெண் வீணாக ஒன்பது ஆண்டுகள் தண்டனை அனுபவிக்க நேரிட்டதை ஒப்புக்கொண்டுள்ள மேன்முறையீட்டு நீதி மன்ற நீதவான் ஏ.சலாம். குறித்த பெண்ணுக்கான தண்டனையை ரத்து செய்து விடுதலை செய்வதாக அறிவித்துள்ளார்.
வழக்கு விசாரணைகளில் கால தாமதம் ஏற்பட்டுள்ளது. வழக்கு விசாரணைகள் கால தாமதமடைந்தமை வேதனையளிக்கின்றது.
வழக்கு தாக்கல் செய்யாது தண்டனையை அனுபவித்திருந்தால் நன்நடத்தை மற்றும் ஏனைய காரணிகளின் அடிப்படையில் வழக்கு விசாரணைகளுக்கு முன்னதாகவே இந்தப் பெண் விடுதலையாகியிருக்கக் கூடிய சாத்தியங்களும் காணப்படுகின்றன.
துரித கதியில் வழக்கு விசாரணை நடத்தப்படாமையினால் பாதிப்புக்கள் ஏற்படுகின்றன.
நிர்வாகக் குறைபாடுகளினால் நாட்டு மக்களுக்கு நீதி கிடைக்காத நிலைமை ஏற்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
மேல் நீதிமன்றில் இந்த வழக்கு விசாரணை நேர்மையான முறையில் நடைபெறவில்லை என்பது தெளிவாகின்றது இதனால் பெண்ணை விடுதலை செய்கின்றேன். என மேன்முறையீட்டு நீதி மன்ற நீதவான் ஏ.சலாம் தெரிவித்தார்.
No comments:
Post a Comment
Leave A Reply