புற்றுநோயினால் தாம் மீண்டும் பீடிக்கப்பட்டுள்ளதாக நியூஸிலாந்து அணியின் முன்னாள் தலைவர் மார்ட்டின் க்ரோவ் தெரிவித்துள்ளார்.புற்றுநோயினால் பீடிக்கப்பட்டிருந்த மார்டின் க்ரோவ் கடந்த ஆண்டு அதில் இருந்து மீண்டிருந்தார்.
எனினும் தற்போது மீண்டும் தமக்கு புற்றுநோய் ஏற்பட்டுள்ளதாக சமூக வலைத்தளத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
1982ஆம் ஆண்டு முதல் 1995ஆம் ஆண்டு வரை நியூஸிலாந்து அணியை பிரதிநிதித்துவப்படுத்திய மார்டின் க்ரோவ் 77 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார்.
நியூஸிலாந்து அணிசார்பாக அதிகளவு சதங்களைப் பெற்ற வீரராகவும் மார்டின் க்ரோவ் வரலாற்றில் இடம்பிடித்துள்ளார்.
No comments:
Post a Comment
Leave A Reply