
குறித்த படகில் சிரியா, பலஸ்தீனம், எகிப்து மற்றும் சூடான் ஆகிய நாடுகளை சேர்ந்தவர்கள் பயணித்துள்ளதாக சர்வதேச புகலிடக் கோரிக்கையாளர்களுக்கான அமைப்பு தெரிவித்துள்ளது.
குறித்த படகு ஐரோப்பாவை கடந்து செல்கையில், கடத்தல்காரர்களின் படகு என சந்தேகிக்கப்படும் படகுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
குறித்த புகலிடக்கோரிக்கையாளர்களுக்கும் கடத்தல்காரர்களுக்குமிடையில் ஏற்பட்ட கருத்து மோதலினால் அவர்கள் இந்த விபத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பாக இத்தாலிய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ள நிலையில், மால்டா பகுதியில் மூழ்கிய படகில் இருந்து தப்பிய பலஸ்தீனியர்கள் இருவர் கடந்த வியாழக்கிழமை மீட்கப்பட்டனர்.
அவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில், படகில் சுமார் 500 பேர் இருந்துள்ளமை தெரியவந்துள்ளது.
No comments:
Post a Comment
Leave A Reply