எதிர்வரும்
10 வருடங்களுக்குள் இந்தியாவிலுள்ள அனைத்து மக்களுக்கும் சொந்த இல்லங்களை
நிர்மாணித்து கொடுப்பதே தமது கனவு என இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி
தெரிவித்துள்ளார்.இந்திய பிரதமர் நரேந்திர மோடி மேடிசன் பூங்காவில் மக்கள் முன் உரை நிகழ்த்தியுள்ளார்..
எல்விஸ் பிரெஸ்லி, எல்டன் ஜான், முஹமது அலி போன்ற உலகப் பிரபலங்களின் நிகழ்வுகளே இதற்கு முன்னர் இந்த மைதானத்தில் நடைபெற்றுள்ளன.
இந்தியப் பிரதமரின் நிகழ்வு இங்கு முதற்தடவையாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதன்போது 2022 ஆம் ஆண்டில் அனைத்து மக்களும் சொந்த இல்லங்களில் வாழ்வதற்கான திட்டங்களை தற்போதிருந்தே முன்னெடுத்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மக்களின் நலனை மாத்திரம் கருத்திற் கொண்டு செயல்படும் தமது அரசாங்கம் 21ஆம் நூற்றாண்டில் உலக நாடுகளை முன்னெடுத்துச் செல்லும் நாடாக இந்தியாவை உருவாக்குவதாக இந்திய பிரதமர் உறுதியளித்துள்ளார்.
இதேவேளை வெளிநாடுகளில் வாழும் இந்திய வம்சாவளியினருக்கு வாழ்நாள் விசா வசதி வழங்கப்படும்’ என பிரதமர் நரேந்திர மோடி இதன்போது அறிவித்துள்ளார் .
அமெரிக்க குடியுரிமை பெற்ற இந்தியர்களுக்கு நீண்ட நாள் விசா வழங்கப்படுவதுடன் இந்தியாவுக்கு வருகை தரும் அமெரிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு உடனடியாக விசா வழங்குவதுடன் நீண்ட நாள் சுற்றுலா விசா வசதியும் அளிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளா்.
No comments:
Post a Comment
Leave A Reply