blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Monday, September 29, 2014

தமிழக முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் இன்று பதவியேற்பு


தமிழக முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் இன்று பதவியேற்புதமிழகத்தின் 17 ஆவது முதலமைச்சராக ஓ.பன்னீர்செல்வம் இன்று பதவியேற்கவுள்ளார்.

சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளியாக காணப்பட்ட ஜெயலலிதா ஜெயராமுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னெற்றக் கழகத்தின் சட்டமன்ற கட்சி தலைவராக ஓ.பன்னீர்செல்வம் நேற்று ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டிருந்தார்.

இதற்கான கடிதத்தை தமிழக ஆளுநர் ரோசைய்யாவை சந்தித்து அவர் கையளித்திருந்தார்.

இதற்கமைய தமிழகத்தில் ஆட்சியமைப்பதற்கு ஓ.பன்னீர் செல்வத்திற்கு ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளார்.

இந்த அழைப்பையேற்று தமிழகத்தின் பதினேழாவது முதல்வராக அவர் இன்று பதிவியேற்கவுள்ளதோடு மாநில அரசின் புதிய அமைச்சரவையும் இன்று பதவியேற்கவுள்ளதாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜெயலலிதா ஜெயராமின் அமைச்சரவையில் நிதி அமைச்சராக பதவிவகித்துவந்த ஓ.பன்னீர்செல்வம் ஏற்கனவே 2001 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் தொடக்கம் 2002 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை தமிழக முதல்வராக பதவி வகித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, சிறையில் அடைக்கப்பட்டுள்ள அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழக பொதுச் செயலாளர் ஜெயலலிதா ஜெயராம் சார்பில் இன்று கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் பிணை மனு தாக்கல் செய்யப்படவுள்ளது.

இந்த நிலையில் ஜெயலலிதாவுக்கு விதிக்கப்பட்டுள்ள தண்டனையை தடை செய்யக்கோரும் உத்திகளை அவரது சட்டத்தரணிகள் பரிசீலித்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

தசரா விடுமுறை வழங்கப்பட்டுள்ள நிலையில் இன்றைய தினம் பிணை மனு தாக்கல் செய்யப்படாலும் நாளைய தினமே அது பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►