நுவரெலியாவில் வீசிய பலத்த காற்றினால் ஐந்து குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.நுவரெலியா லவர்ஸ்லிப் தோட்டத்தில் வீசிய கடும் பாற்றினால் 12 வீடுகள் நேற்று மாலை சேதமடைந்திருந்தன.
இதனால் இடம்பெயர்ந்த ஐந்து குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக மாவட்ட செயலாளர் டி.பி.ஜி குமாரசிறி தெரிவித்துள்ளார்.
இதேவேளை மொனராகலை, தொடம்ப-கஹவெல, நுக-கஹ-கிவுல பகுதிகளை நேற்று பிற்பகல் ஊடறுத்து வீசிய பலத்த காற்றினால் 2 வீடுகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது.
நிலவும் அதிக மழையுடனான வானிலையால் கேகாலை, கண்டி, மற்றும் மாத்தளை ஆகிய மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.
குறித்த மாவட்டங்களில் அதிக மழை பெய்யும் போது அங்குள்ள மக்கள் மிகவும் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என இடர் முகாமைத்துவ நிலையம் குறிப்பிடுகின்றது.
இதேவேளை, நாட்டின் சில பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
No comments:
Post a Comment
Leave A Reply