பி.பி.ஸி. தமிழ் சேவை இந்தியாவுக்கு இடம்பெயரவுள்ளது என்று ஹிந்துஸ்தான் ரைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. 2017ஆம் ஆண்டு வரையான செலவினங்களைக் குறைக்கும் திட்டத்தின் படியே, இந்த இடமாற்றம் நடக்கவுள்ளது. இதுதொடர்பாக, கருத்து வெளியிட்ட பி.பி.ஸி. உலகசேவை பேச்சாளர் ஒருவர், பி.பி.ஸி. தமிழ் சேவை நேயர்கள் இந்தியாவில் அதிகரித்து வருகின்றனர்.
ஹிந்தி சேவை வெற்றிகரமாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில், தமிழ்ச் சேவையையும், இந்தியாவுக்கு இடமாற்றம் செய்வதன் மூலம் நேயர்களுக்கு அதிக வசதிகளை வழங்க முடியும்.
இந்தியாவில் உள்ள தமிழ் நேயர்களின் கவனத்தை ஈர்ப்பதற்கு தமிழோசை முக்கிய கவனம் செலுத்தவுள்ளது.
அதேவேளை, இலங்கை தமிழர்களுக்கும், புலம்பெயர்ந்தும் வாழும் தமிழ் நேயர்களுக்காகவும், தமிழ்ச்சேவை தொடர்ந்தும் பணியாற்றும். இந்த நடவடிக்கையின் படி, லண்டனில் உள்ள தமிழ்ச்சேவை பணியகம் மூடப்பட்டு, புதுடில்லியில் அதனைத் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது- என்று தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment
Leave A Reply