காணாமற்போனோர் தொடர்பில் இலங்கையில் நியாயமான முறையில் விசாரணைகள் நடத்தப்படுவதை உறுதிப்படுத்துவேன் என்று, ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு ஆலோசனை வழங்க, இலங்கை ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ள நிபுணர் குழுவின் தலைவரான டெஸ்மன் டி சில்வா தெரிவித்துள்ளார். கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்றுக்கு வழங்கியுள்ள குறுகிய செவ்வி ஒன்றில் அவர் இதனைத் தெரிவித்திருக்கிறார். இலங்கைப் பிரச்சினையில் மிக முக்கியமான செயல் முறை ஒன்றில் பங்காற்ற என்னை அழைத்திருப்பது மிகவும் பெருமைகொள்ள வைக்கிறது.
எனுடன் நியமிக்கப்பட்டுள்ளவர்கள் குறித்தும் எனக்கு நம்பிக்கை உள்ளது. இதன்மூலம் நியாயமான விசாரணை நடப்பதை உறுதிப்படுத்த முடியும் என்று நான் நம்புகிறேன்- என்று அவர் தெரிவித்துள்ளார் என்று அந்தப் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
No comments:
Post a Comment
Leave A Reply