ஊடகவியலாளர்கள், மதச் சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள், சட்டத்தின் ஆட்சி பலவீனப்பட்டுள்ளமை, சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோர் தண்டிக்கப்படாமை என்பன, இலங்கையின் ஜனநாயக் நடைமுறையின் பெருமைகளைச் சீர்குலைக்கின்றன என்று அமெரிக்கா கவலை வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாகக் கருத்து வெளியிட்டுள்ள கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகப் பேச்சாளர் ஒருவர், இலங்கையில் பொறுப்புக்கூறலை வெளிப்படுத்தக்கூடிய உள்நாட்டு செயல்முறைக்கு அமெரிக்கா நீண்டகாலமாகவே ஆதரவு தெரிவித்து வருகிறது.
இலங்கையில் இடம்பெற்றதாகக்கூறப்படும் மனித உரமை மீறல் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிப்பதற்கான நம்பகமான விசாரணைகளையும் நாம் வரவேற்கிறோம்.
உள்ளாட்டில் வடிவமைக்கப்பட் ஆணைக்குழு முன் சாட்சியமளித்த பலர், பரந்தளவில் இலங்கைப்படையினருக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருக்கின்றனர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில் காணாமற் போனோர் குறித்து விசாரிக்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவின், நம்பகத்தன்மை மற்றும், சுதந்திரம் தொடர்பான அனைத்துலக தர நியமங்களை உறுதி செய்யும் வகையில் அதற்கு ஆலோசனை வழங்குவதற்கென நியமிக்கப்பட்டுள்ள நிபுணர்குழுவை நாம் நம்புகிறோம்.
ஜனநாயகம், நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் இல்லாமல், இலங்கைமக்களுக்கு நிலையான அமைதியோ செழிப்போ உருவாகாது. என்றார்.
No comments:
Post a Comment
Leave A Reply