blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Saturday, July 19, 2014

நாய் குரைத்தமைக்கும் பொலிஸில் முறைப்பாடு; அதனை விற்குமாறு பொலிஸார் உத்தரவு…!

dogநாய் குரைத்தமைக்கும் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்ட சம்பவம் ஒன்று யாழ். நகரத்தில் இடம்பெற்றுள்ளது.
இச் சம்பவம் குறித்து மேலும் தெரிய வருவதாவது:

அமெரிக்காவைச் சேர்ந்த வெளிநாட்டவர் ஒருவர் நீர்ப்பாசனத் திணைக்களத்தின் பொறியியலாளாராகக் கடமையாற்றி வருகின்றார். இவர் யாழ். நாவலர் வீதியில் உள்ள வீடொன்றில் வாடகைக்கு வசித்து வருகிறார்.

தான் வசிக்கும் வீட்டுக்கு அருகில் உள்ள வீட்டில் வளர்க்கும் நாய் தொடர்ந்து குரைப்பது தமக்கு அசௌகர்யத்தை ஏற்படுத்துவதாக நேற்று வெள்ளிக்கிழமை அவர் யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.

அந்த முறைப்பாட்டின் பிரகாரம் இரு தரப்பினரையும் பொலிஸார் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்து விசாரணை மேற்கொண்டனர்.

அந்த விசாரணையின் போது, அயல் வீட்டில் உள்ள சேவல் கூவுவது மற்றும் நாய் குரைப்பது தமக்கு அசௌகரியமாக இருக்கின்றது என அந்த வெளிநாட்டவர் தொவித்தார்.

நாயை வீட்டுக்கு பாதுகாப்புக்காகவே வளாக்கின்றோம். நாய் குரைப்பது இயல்பான ஒரு செயற்பாடு. அதற்காக நாயை குரைக்க வேண்டாமெனச் சொல்ல முடியாது. தடுக்கவும் முடியாது என நாயின் உரிமையாளர் விசாரணையின் போது கூறினார்.

அதற்கு அந்த வெளிநாட்டவர், குரைக்காமல் இருக்கும் நாயை வளர்க்குமாறும், அவ்வாறு குரைக்காமல் இருப்பதற்கு நாய்க்குப் பழக்குமாறும் பொலிஸ் நிலையத்தில் பொலிஸாருக்கு முன்பாகத் தெரிவித்தார்.

வெளிநாட்டவர் கூறியதை கேட்ட யாழ்ப்பாணத்துப் பொலிஸார், நாயை விற்குமாறு அதன் உரிமையாளரிடம் பணித்துள்ளனர். வீட்டுக்குப் பாதுகாப்புத் தருமாறு, வீட்டு உரிமையாளர் பொலிஸாரிடம் கேட்டதற்கு, பாதுகாப்பு தருவது பொலிஸாரின் கடமை அல்ல.

எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 05 ஆம் திகதிக்கு முன்னர் நாயை விற்க வேண்டும். அவ்வாறு விற்காவிடின் குறித்த சம்பவம் தொடர்பாக நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்ய நேரிடும் என்று கூறி அனுப்பினர்.
நாய் குரைத்தமைக்கும் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்ட சம்பவம் ஒன்று யாழ். நகரத்தில் இடம்பெற்றுள்ளது.
இச் சம்பவம் குறித்து மேலும் தெரிய வருவதாவது:
அமெரிக்காவைச் சேர்ந்த வெளிநாட்டவர் ஒருவர் நீர்ப்பாசனத் திணைக்களத்தின் பொறியியலாளாராகக் கடமையாற்றி வருகின்றார். இவர் யாழ். நாவலர் வீதியில் உள்ள வீடொன்றில் வாடகைக்கு வசித்து வருகிறார்.
தான் வசிக்கும் வீட்டுக்கு அருகில் உள்ள வீட்டில் வளர்க்கும் நாய் தொடர்ந்து குரைப்பது தமக்கு அசௌகர்யத்தை ஏற்படுத்துவதாக நேற்று வெள்ளிக்கிழமை அவர் யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.
அந்த முறைப்பாட்டின் பிரகாரம் இரு தரப்பினரையும் பொலிஸார் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்து விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையின் போது, அயல் வீட்டில் உள்ள சேவல் கூவுவது மற்றும் நாய் குரைப்பது தமக்கு அசௌகரியமாக இருக்கின்றது என அந்த வெளிநாட்டவர் தொவித்தார்.
நாயை வீட்டுக்கு பாதுகாப்புக்காகவே வளாக்கின்றோம். நாய் குரைப்பது இயல்பான ஒரு செயற்பாடு. அதற்காக நாயை குரைக்க வேண்டாமெனச் சொல்ல முடியாது. தடுக்கவும் முடியாது என நாயின் உரிமையாளர் விசாரணையின் போது கூறினார்.
அதற்கு அந்த வெளிநாட்டவர், குரைக்காமல் இருக்கும் நாயை வளர்க்குமாறும், அவ்வாறு குரைக்காமல் இருப்பதற்கு நாய்க்குப் பழக்குமாறும் பொலிஸ் நிலையத்தில் பொலிஸாருக்கு முன்பாகத் தெரிவித்தார்.
வெளிநாட்டவர் கூறியதை கேட்ட யாழ்ப்பாணத்துப் பொலிஸார், நாயை விற்குமாறு அதன் உரிமையாளரிடம் பணித்துள்ளனர். வீட்டுக்குப் பாதுகாப்புத் தருமாறு, வீட்டு உரிமையாளர் பொலிஸாரிடம் கேட்டதற்கு, பாதுகாப்பு தருவது பொலிஸாரின் கடமை அல்ல.
எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 05 ஆம் திகதிக்கு முன்னர் நாயை விற்க வேண்டும். அவ்வாறு விற்காவிடின் குறித்த சம்பவம் தொடர்பாக நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்ய நேரிடும் என்று கூறி அனுப்பினர்.
 
- See more at: http://www.athirady.com/tamil-news/news/414174.html#sthash.eT0dK5Ml.dpuf

No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►