கொய்யாத்தோட்டம் பழைய பூங்கா வீதி சிறுவர் நீதிமன்றத்திற்கு அருகாமையில் உள்ள வீடொன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.இச்சம்பவத்தில் 19வயதுடைய அன்ரன் செலஸ்ரா என்ற இளம்பெண் ஒருவரே உயிரிழந்துள்ளதாகத்
தெரிவிக்கப்படுகின்றது.
நேற்று இரவு 10 மணியளவில் உயிரிழந்ததாக இளம்பெண்ணின் கணவர் பொலிஸாரிற்கு அறிவித்ததை அடுத்து பொலிஸார் அவ்விடத்திற்குச் சென்று விசாரணைகளை மேற்கொண்டனர்.
பின்னர் இச்சடலத்தை இன்று காலை மரண விசாரணை அதிகாரி பார்வையிட்டதன் பின்னர் அவரது சடலம் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.
மேலும் இச்சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment
Leave A Reply