யுக்ரைனின்
கிளர்ச்சியாளரின் கட்டுப்பாட்டிலுள்ள பகுதியில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணை
மூலமே மலேஷிய பயணிகள் விமானம் சூட்டு வீழ்த்தப்பட்டதாக அமெரிக்க ஜனாதிபதி
பரக் ஒபாமா தெரிவித்துள்ளார்.அத்துடன் யுக்ரைனின் கிழக்குப் பிராந்தியத்தில் உடனடி யுத்த நிறுத்தம் ஏற்படுத்தப்பட்டு நம்பகமான விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
இந்த விமானத்தில் ஏற்பட்ட உயிரிழப்புக்களினால் தாம் மிகவும் கவலையடைந்துள்ளதாகவும் அமெரிக்க ஜனாதிபதி பரக் ஒபாமா சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, சம்பவம் தொடர்பில் முழுமையான விசாரணைகளை முன்னெடுப்பதற்கு ஐரோப்பிய பாதுகாப்பு கூட்டுறவு அமைப்பைச் சேர்ந்த 20 நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த விமானத்தை ஏவுகணை மூலம் சுட்டு வீழ்த்தியதாக யுக்ரைய்ன் அரச தரப்பினரும் கிளர்ச்சியாளர்களும் பரஸ்பரம் குற்றஞ்சாட்டி வருகின்ற நிலையில் இந்த விடயம் தொடர்பில் சுயாதீன விசாரணைகள் அவசியம் என ஐ.நா கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடதக்கது.
மேலும் விமான விபத்தை அடுத்து யுக்ரைன் வான்பரப்பில் பயணிப்பதற்கு இந்திய விமானங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
பயணிகளின் பாதுகாப்பு கருதி இந்த ஆணையை பிறப்பித்ததாக இந்திய உள்நாட்டு விமான போக்குவரத்து அதிகார சபை அறிவித்துள்ளது.
அத்துடன் சீனாவும் தனது நாட்டு விமானங்கள் யுக்ரேனின் கிழக்கு பிராந்தியத்திற்குள் பயணிப்பதற்கு தடை விதித்துள்ளது.
No comments:
Post a Comment
Leave A Reply