blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Saturday, July 19, 2014

போர்த்துக்கல் பிரதமர் இலங்கைக்கு விஜயம்


போர்த்துக்கல் பிரதமர் இலங்கைக்கு விஜயம்போர்த்துக்கல் பிரதமர் பெட்ரோ பசோஸ் கொயில்ஹோ நாளை இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.


நாட்டிற்கு வரவுள்ள போர்த்துக்கல் பிரதமரை விமான நிலையத்தில் அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் வரவேற்கவுள்ளார்.

இலங்கைக்கான தமது ஒருநாள் விஜயத்தில், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ மற்றும் பிரதமர் டி.எம். ஜயரத்ன ஆகியோரை போர்த்துக்கல் பிரதமர் கொயில்ஹோ சந்திக்கவுள்ளார்.

அத்துடன் காலி கோட்டைக்கும் விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, தன்ஸானியாவின் வெளிவிவகார மற்றும் சர்வதேச ஒத்துழைப்புக்கான அமைச்சர் பேர்னாட் மெம்பியும் நாளை இலங்கை வருகை தரவுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவிக்கின்றது.

இவர் தனது இரண்டு நாள் விஜயத்தில், அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸுடன், வெளிவிவகார அமைச்சில் இருதரப்பு சந்திப்பில் கலந்துகொள்ளவுள்ளார்.

இதன்போது இலங்கைக்கும், தன்ஸானியாவுக்கும் இடையில் இரண்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்படவுள்ளன.

அதனைத் தொடர்ந்து இருநாட்டு வெளிவிவகார அமைச்சர்களும் இணை ஊடகவியலாளர் சந்திப்பொன்றையும் நடத்துவதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

எவ்வாறாயினும், போர்த்துக்கல் பிரதமரும், தன்ஸானிய வெளிவிவகார அமைச்சரும் ஒரே விமானத்தில் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் ஊடாக நாளை இலங்கைக்கு வரவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►