blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Friday, July 18, 2014

இன்று கூகுள் டூடிளில் தோன்றும் நெல்சன் மண்டேலாவின் புகழ்பெற்ற வாக்கியங்களின் அர்த்தம் என்ன?


இன்று நெல்சன் மண்டேலாவின் 91வது பிறந்தாளை முன்னிட்டு கூகுள் தேடுபொறி தனது டூடுள் இலட்சிணையை நெல்சன் மண்டேலாவின் அற்புத கூற்றுக்களைக் கொண்டு வடிவமைத்துள்ளது.

‘ஒருவருடைய தோல் நிறம், ஒருவருடைய பின்னணி, ஒருவருடைய மதம் ஆகிய காரணங்களுக்காக, எவரும் பிறக்கும் போதே ஒருவரை இன்னொருவர் வெறுப்பதில்லை.”

“மக்கள் வெறுப்பதற்கு கற்றுக் கொள்ளவேண்டும். அப்படி அவர்கள் வெறுப்பதற்கு கற்றுக் கொள்ள முடியுமாயின், அவர்கள் அன்பு செலுத்துவதற்கும் கற்றுக் கொள்ளக் கூடியவர்களே. எப்போதும் வெறுப்பதை விட அன்பு செலுத்துவது என்பது இதயத்திற்கு மிக இயல்பானதாகவும், இலகுவானதாகவும் வருகிறது.”

“நாங்கள் எப்படி வாழ்கிறோம் என்பதை வெறுமனே வைத்து எமது வாழ்க்கை தீர்மானிக்கப்படுவதில்லை. மற்றவர்களின் வாழ்க்கையின் நாம் என்ன மாற்றத்தை ஏற்படுத்துகிறோம். அது எப்படி நாம் வழிநடத்தும் வாழ்க்கையின் முக்கியத்துவத்தை தீர்மானிக்கிறது என்பதை வைத்தே எமது வாழ்க்கை கணிக்கப்படுகிறது.”

“உலகை மாற்றக் கூடிய மிகச் சக்திவாய்ந்த ஆயுதம் கல்வி”

”சுதந்திரமாக இருப்பதென்பது ஒருவரின் பிணைப்பில் இருந்து விடுபதுவதென அர்த்தமாகாது. மற்றவர்களின் சுதந்திரத்தை மதிப்பதும், பெருமைப்படுத்துவதுமாக எமது வாழ்க்கையை அமைவதே உண்மையான சுதந்திரம்”

“வாழ்க்கையின் மிகச்சிறந்த புகழ், ஒரு போதும் வீழ்ச்சி அடையாமல் இருப்பதில் தங்கியிருப்பதல்ல. ஒவ்வொரு முறையும் வீழும் போதும் மீண்டும் எழுச்சி கொள்ளுதலில் தங்கியிருக்கிறது.”

1918ம் ஆண்டு ஜூலை 18ம் திகதி பிறந்த நெல்சன் மண்டேலாவின் 96வது பிறந்த தினம் இன்றாகும். அவர் கடந்த 2013ம் ஆண்டு டிசம்பர் 5ம் திகதி காலமானார்.

No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►