blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Friday, May 9, 2014

இலங்கைக்குப் படையயடுக்கும் சீன நாட்டு சுற்றுலாப் பயணிகள்திடீர் அதிகரிப்பு என்கிறது புள்ளிவிவரம்

இலங்கைக்கு  வரும் சீன சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை திடீரென அதிகரித்துள்ளது என்று இலங்கை அரசு  வெளியிட்டுள்ள தகவல்களில் இருந்து தெரியவந்துள்ளது.
இந்த ஆண்டின் முதல் நான்கு மாதங்களில், இலங்கைக்கு  534,132 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர். இது முன்னைய ஆண்டின் ஜனவரி தொடக்கம் ஏப்ரல் வரையான இதே காலப் பகுதியுடன் ஒப்பிடும்போது, 27.6 வீத அதிகரிப்பாகும்.

இந்த ஆண்டில் ஒவ்வொரு மாதமும், ஒரு லட்சத்துக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளனர். ஏப்ரல் மாதம், 112,631 சுற்றுலாப் பயணிகள்   வந்துள்ளனர்.

இது முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில், 39.5 வீத அதிகரிப்பு என்று  கூறப்பட்டுள்ளது. ஏப்ரல் மாதம் மேற்கு ஐரோப்பிய நாடுகளில் இருந்து வந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 37,369 என்றும்,  முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில், இது 48 வீத வளர்ச்சி என்றும் கூறப்பட்டுள்ளது.

இதேவேளை, இந்த ஆண்டின் முதல் நான்கு மாதங்களிலும், மேற்கு ஐரோப்பிய நாடுகளில் இருந்து 181,129 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளனர். இது 36 வீத அதிகரிப்பாகும்.

இந்தியாவில் இருந்து 71,346 சுற்றுலாப் பயணிகள் ஜனவரி மாதம்  தொடக்கம் ஏப்ரல் மாதம்  வரை இலங்கை  வந்துள்ளனர். இது 20 வீத அதிகரிப்பாகும். தெற்காசியாவில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளின் தொகையிலும், இந்த நான்கு மாத காலத்தில் 20 வீத அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

அதேவேளை, இலங்கைக்கு  வருகை தந்துள்ள சீனர்களின் எண்ணிக்கையில் பெரும் அதிகரிப்பு காணப்படுகிறது. இவ்வாண்டில் ஜனவரி தொடக்கம் ஏப்ரல் வரை 36,803 சீன சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு  வந்துள்ளனர். இது 136 வீத அதிகரிப்பாகும்.

ஏப்ரல் மாதத்தில் மட்டும், 8005 சீன சுற்றுலாப் பயணிகள் இலங்கை வந்துள்ளனர். இது 170 வீத அதிகரிப்பு என்று அரச தகவல்கள் கூறுகின்றன.

No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►