ஐ.பி.எல் தொடரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் ரோயல்ஸ்
அணிகளுக்கு இடையிலான லீக் போட்டியொன்று நேற்று முன்தினம் இடம்பெற்றது.
போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ராஜஸ்தான ரோயல்ஸ் 191 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
இந்நிலையில்,
192 என்ற வெற்றியிலக்கை நோக்கி கிங்ஸ் லெவன் பஞ்சாப் துடுப்பெடுத்தாடியது.
ஒரு கட்டத்தில் ராஜஸ்தான் ரோயல்ஸிற்கு வெற்றி வாய்ப்பு இருந்தது.
எனினும் டேவிட் மில்லர் 19 பந்துகளில் 5 சிக்ஸ்ர்கள் அடங்களாக 52 ஓட்டங்களை பெற்று வெற்றியை உறுதிப்படுத்தினார்.
இந்த போட்டியில் டேவிட் மில்லர் குல்கர்னி வீசிய 18ஆவது ஓவரில் 4 சிக்சர்களை அடித்து வெற்றிக்கு வித்திட்டார்.
இதைத் தொடர்ந்து 19ஆவது ஓவரில் சிக்சருடன் இன்னிங்ஸை நிறைவு செய்தார் மில்லர்.
இந்த
வெற்றிக் கொண்டாட்டத்தை கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் உரிமையாளர், பிரபல
பொலிவுட் நடினை ப்ரீதி சின்டா கொண்டாடிய விதம் பலரையும் கவர்ந்தது.
ஊடவியலாளர்களின் கமராக்களில் அவருடைய கொண்டாட்டம் மிகச் சிறப்பாக பதிவாகியது.






No comments:
Post a Comment
Leave A Reply