பூநகரிபிரதேச சபையினால் புதிதாக அமைக்கப்பட்ட சந்தை கட்டிடத்தொகுதி வெளிப்பிரதேச வியாபாரிகளுக்கு தாரைவார்த்து கொடுக்கப்பட்டுள்ளது என்று ஊடகங்களில் வெளியான செய்திகளில் எந்தவித உண்மையும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பாக பிரதேச சபை தவிசாளர் பொ.ஸ்ரீஸ்கந்தராஜாவிடம் உதயன் ஒன்லைன் தொடர்புகொண்டு கேட்டபோது.புதிதாக அமைக்கப்பட்ட சந்தைக் கட்டிடத்தொகுதியில் மொத்தம் உள்ள 32கடைகளையும் 05-04-2014 அன்று பகிரங்க ஏலவிற்பனையில் விட்டபோது 31 கடைகளை உள்ளூர் வியாபரிகள் பெற்றுக்கொண்ட அதேசமயம் ஒரு கடையை மட்டும் யாழ்,மாவட்ட வியாபாரி ஒருவர் பெற்றுக்கொண்டார்.
குறித்த ஏல விற்பனை தொடர்பாக அன்று பூநகரி பிரதேச சபைக்கும் வர்த்தகர்களுக்கும் இடையில் இடம் பெற்ற கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டு பிரச்சனைகள் ஏதும் இன்றி ஏலவிற்பனை முடிவடைந்துள்ளது.
இந்த நிலையில் குறித்த சந்தை கட்டிடத்தொகுதி தொடர்பாக ஊடகங்களில் அண்மையில் வெளியான செய்தியின் மூலம் பூநகரி பிரதேச சபை நிர்வாகத்திற்கு களங்கம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் இந்த செய்தியில் எவ்வித உண்மையும் இல்லை என தெரிவித்தார்.
இதேவேளை குறித்த பகுதியில் இடம்பெற்று வரும் பஸ் நிலைய கட்டிட வேலை பணிகள் காரணமாக சந்தை கட்டிடத்தொகுதி முழுமையாக செயற்பட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது, எனினும் வெகு விரைவில் கோலாகலமாக செயற்பட நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்தார்.
No comments:
Post a Comment
Leave A Reply