blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Wednesday, April 23, 2014

பாலியல் தொந்தரவளித்த சிறுவன் கைது

12 பெண்களுக்கு பாலியல் தொந்தரவளித்த சிறுவன் கைது

இங்கிலாந்தில் 17 வயது முதல் 48 வயது வரை உள்ள 12 பெண்களிடம் தவறாக நடந்து கொண்டதாக 14 வயது சிறுவன் ஒருவனை அந்நாட்டு பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இது குறித்து பொலிஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், "கடந்த ஒரு வருடத்தில் மட்டும் 12 பெண்களிடம் இவன் தவறாக நடக்க முயற்சித்துள்ளான். கடைசியாக கடந்த அக்டோபர் மாதம் 48 வயது பெண் ஒருவரிடம் தவறாக நடக்க முயற்சித்த போது மாட்டிக்கொண்டான்.

இவனைக் குறித்து புகாரை வெளிப்படையாக அறிவித்த பாதிக்கப்பட்ட பெண்களுக்கு என்னுடைய நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

குற்றவாளி சிறுவன் 16 வயதுக்குட்பட்டிருப்பதால் சிறப்பு நீதிமன்றம் அவனுக்கு 12 மாதம் சிறார் சிறையில் தண்டனை அளித்து உத்தரவிட்டுள்ளது.

No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►