தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் மற்றும் சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க ஆகியோர் இலங்கை அரசாலேயே படுகொலை செய்யப்பட்டனர். இவ்வாறு கூறியுள்ளார் நோர்வேயின் முன்னாள் சமாதானத் தூதுவர் எரிக் சொல்ஹெய்ம்.
முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமர் படுகொலை தொடர்பாக, டுவிட்டர் சமூக வலைத்தளத்தில் நடந்த விவாதம் ஒன்றிலேயே எரிக் சொல்ஹெய்ம் இது குறித்துக் கூறியுள்ளார்.முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமரையும், தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் நீலன் திருச்செல்வத்தையும் தமிழீழ விடுதலைப் புலிகளே படுகொலை செய்தனர் என்பதை அந்த விவாதத்தின் போது ஏற்றுக் கொண்ட சொல்ஹெய்ம், அது போலவே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தையும், சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவையும் இலங்கை அரசே படுகொலை செய்தது என்று தனது "டுவிட்டர்' பதிவில் சுட்டிக்காட்டியுள்ளார்.
நோர்வேயின் அனுசரணையுடனான போர் நிறுத்த உடன்பாடு நடைமுறையில் இருந்த சமயம், நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் மட்டக்களப்பில் உள்ள தேவாலயம் ஒன்றில் நத்தார் ஆராதனைகளில் கலந்துகொண்டிருந்த போது சுட்டுகொல்லப்பட்டார்.
No comments:
Post a Comment
Leave A Reply