blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Thursday, May 22, 2014

சென்னையில் வாகன விபத்து; கவலைக்கிடமான நிலையில் நடிகர் நாசரின் மகன்


சென்னையில் வாகன விபத்து; கவலைக்கிடமான நிலையில் நடிகர் நாசரின் மகன்சென்னை கிழக்குகடற்கரைச் வீதியில் இன்று காலை நடந்த விபத்தில் நடிகர் நாசரின் மகன் படுகாயமடைந்து கவலைக்கிடமான நிலையில் உள்ளார்.

மகாபலிபுரம் மணவை கிராமம் அருகே வந்து கொண்டிருந்த போது லொரி ஒன்றுடன் நாசரின் மகன் உள்ளிட்ட சிலர் பயணித்த கார் மோதி விபத்திற்கு உள்ளாகியுள்ளது.
22-car-accident-nasser-sonn-66
இந்த விபத்தில் காரில் இருந்தவர்களில் 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர்.

நடிகர் நாசர் மகன் பைசில் நாசர் படுகாயமடைந்தார்.
சிகிச்சைக்காக அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
22-car-accident12-600
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும், சென்னையில் உத்தமவில்லன் படப்பிடிப்பில் இருந்த நடிகர் நாசர் மருத்துவமனைக்கு விரைந்துள்ளார்.

நடிகர் நாசரின் மூத்த மகனான பைசில் நாசர், சைவம் என்ற திரைப்படத்தில் நடித்திருக்கிறார்.
3a12b1f1-9cbd-45ef-8e60-723b1e002398_S_secvpf.gif
சம்பவம் குறித்து காஞ்சிபுரம் பொலிஸார் கூறுகையில்: “விபத்து காலை 8 மணியளவில் நடந்துள்ளது. கார் திடீரென தாறுமாறாக ஓடி எதிரே வந்த லொரி மீது மோதியுள்ளது. அதற்கான காரணம் இன்னும் தெரியவில்லை.

3 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். காரின் பின் சீட்டில் அமர்ந்திருந்த பைசில் நாசர், அவரது நண்பர் விஜயகுமார் ஆகிய இருவர் மட்டுமே உயிர் பிழைத்துள்ளனர். அவர்களது நிலைமையும் கவலைக்கிடமாக இருக்கிறது” என்றார்

No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►