blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Saturday, May 10, 2014

இன்றும் ரயில் சேவைகளில் தாமதம்

இன்றும் ரயில் சேவைகளில் தாமதம்ரயில் பாதுகாப்பு விதிமுறைகளின் பிரகாரம் மாத்திரம் போக்குவரத்து முன்னெடுக்கப்படுவதன் காரணமாக இன்றும் 12 ரயில் சேவைகளில் தாமதம் நிலவியுள்ளது.

கரையோர மார்க்கத்தில் இன்று முற்பகல் போக்குவரத்தில் ஈடுபட்டிருந்த ருஹுணு குமாரி, காலி குமாரி, சாகரிக்கா மற்றும் ரஜரட்ட ரெஜிண ஆகிய கடுகதி ரயில் சேவைகளிலும் தாதம் நிலவியதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் குறிப்பிடுகின்றது.

இதேவேளை, சமிக்ஙை கட்டமைப்பின் கோளாறுகள் நிவர்த்தி செய்யப்படும் வரை, ரயில் பாதுகாப்பு விதிமுறைகளின் பிரகாரம் மாத்திரம் ரயில் போக்குவரத்தில் ஈடுபடுவதை கைவிடப் போவதில்லை என லொகோமோடிவ் ஒப்பரேட்டிங் இஞ்ஜினியர் சங்கம் தெரிவிக்கின்றது.

கடந்த மூன்று நாட்களாக ரயில் போக்குவரத்தில் நிலவியுள்ள தாமதம் காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர்.
கொழும்பு கோட்டையில் இருந்து சிலாபம் நோக்கிப் பயணித்த இரவுநேர ரயிலின் சாரதி மீது கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலய ரயில் நிலையத்தில் சிலர் நேற்றிரவு தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் கைதான சந்தேகநபர் ஒருவர், நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்செய்யப்பட்ட பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►