உலகில் பல நாடுகளில் வெவ்வேறு தினங்களில் அன்னையர்
தினம் கொண்டாடப்படுகிறது. மே மாதம் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை அன்னையர்
தினமாக அன்னா ஜார்விஸ் என்பவரால், அமெரிக்காவின் மேற்கு வெர்ஜினியாவின்
கிராம்ப்டன் நகரில் முதன்முதலில் அறிவிக்கப்பட்டது.
இந்த நாளே பெரும்பாலான
நாடுகளில் அன்னையர் தினமாக கொண்டாடப்படுகிறது. உலக வரலாற்றில்
இயற்கையையும், அன்னையையும் தெய்வங்களாக கருதி வழிபட்டுள்ளனர். சமுதாயத்தில்
உயர்ந்த ஒவ்வொரு மனிதரும், அன்னையின் கடின உழைப்பாலும், தியாகத்தாலுமே
பெருமை அடைந்துள்ளனர்.
அன்னையை போற்றாத எவரும் வாழ்க்கையில் வெற்றி பெற
முடியாது. சிறந்த சமுதாயத்தை உருவாக்க அன்னையர்களின் பங்களிப்பு
முக்கியமானது. "எந்த குழந்தையும், நல்ல குழந்தை தான் மண்ணில் பிறக்கையிலே,
பின்பு, நல்லவராவதும் தீயவராவதும் அன்னை வளர்ப்பினிலே' என்ற பாடல்
வரிகளுக்கு ஏற்ப சமுதாயத்துக்கு நல்ல மனிதர்களை உருவாக்கி வழங்குவது அன்னை
தான்.
தீய வழியில் செல்லும் குழந்தைகளை திருத்தி நல்வழிக்கு கொண்டு
வருவதும் அன்னை தான். இன்றைய தினத்தில் ஒவ்வொருவரும் அன்னையின் தியாகத்தை
நினைத்து அவர்களுடன் இந்த நாளை கொண்டாடி மகிழலாம். அன்னையை சந்திக்க
முடியாதவர்கள் போனில் வாழ்த்துக்களை
சர்வதேச அன்னையர் தினம் இன்றாகும்..
உலகில் பல நாடுகளில் வெவ்வேறு தினங்களில் அன்னையர் தினம்
கொண்டாடப்படுகிறது. மே மாதம் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை அன்னையர் தினமாக
அன்னா ஜார்விஸ் என்பவரால், அமெரிக்காவின் மேற்கு வெர்ஜினியாவின்
கிராம்ப்டன் நகரில் முதன்முதலில் அறிவிக்கப்பட்டது.
இந்த நாளே பெரும்பாலான
நாடுகளில் அன்னையர் தினமாக கொண்டாடப்படுகிறது. உலக வரலாற்றில்
இயற்கையையும், அன்னையையும் தெய்வங்களாக கருதி வழிபட்டுள்ளனர். சமுதாயத்தில்
உயர்ந்த ஒவ்வொரு மனிதரும், அன்னையின் கடின உழைப்பாலும், தியாகத்தாலுமே
பெருமை அடைந்துள்ளனர்.
அன்னையை போற்றாத எவரும் வாழ்க்கையில் வெற்றி பெற
முடியாது. சிறந்த சமுதாயத்தை உருவாக்க அன்னையர்களின் பங்களிப்பு
முக்கியமானது. "எந்த குழந்தையும், நல்ல குழந்தை தான் மண்ணில் பிறக்கையிலே,
பின்பு, நல்லவராவதும் தீயவராவதும் அன்னை வளர்ப்பினிலே' என்ற பாடல்
வரிகளுக்கு ஏற்ப சமுதாயத்துக்கு நல்ல மனிதர்களை உருவாக்கி வழங்குவது அன்னை
தான்.
தீய வழியில் செல்லும் குழந்தைகளை திருத்தி நல்வழிக்கு கொண்டு
வருவதும் அன்னை தான். இன்றைய தினத்தில் ஒவ்வொருவரும் அன்னையின் தியாகத்தை
நினைத்து அவர்களுடன் இந்த நாளை கொண்டாடி மகிழலாம். அன்னையை சந்திக்க
முடியாதவர்கள் போனில் வாழ்த்துக்களை தெரிவிக்கலாம். கோவிலுக்கு சென்று
கடவுளை வணங்குவதை விட, நாம் இந்த உலகுக்கு வர காரணமாய் இருந்த அன்னையை இந்த
நாளில் மனதார போற்றி வணங்குவோம்.
அன்பின் ஆலயம்... உலாவும் சொர்க்கம்... அன்னை! நாடி நரம்புகள்
தளர்ந்து முகச் சுருக்கங்கள் படர்ந்து பொக்கை வாய் சிரிப்பில் தேவதையாய்
ஜொலிக்கிறாள் என் தாய்... ஏழைக்கும், பணக்காரனுக்கும் கடவுள் சமமாக கொடுத்த
வரம்... அன்னை. அன்னையிடம் மட்டும் தான் பேதமில்லாத அன்பை காணமுடியும்.
ஒற்றைப் பிள்ளை பெற்றாலும், பத்துப் பிள்ளை இருந்தாலும், அங்கே அன்பு
மாறுவதில்லை. கருவறையில் சுமக்கும் போதே, பிள்ளையின் கனவுகளையும் சுமந்து,
காலம் முழுதும் பிள்ளைக்காகவே வாழும் உன்னத சொர்க்கம் அவள்.
பிள்ளையை சான்றோன் என கேட்டால் சந்தோஷப்படுவாள். குற்றவாளி என்று
சொன்னால் வருத்தப்படுவாள், ஆனால் வெறுக்கமாட்டாள். இந்த தாயுள்ளத்தை,
நம்மில் எத்தனை பேர் போற்றி பாராட்டுகிறோம்? திருமணத்திற்கு பின் நிறைய
பேருக்கு, தாய், தந்தையர் வேண்டாத பொருளாகி விடுகின்றனர். கர்ப்பத்தில்
பத்து மாதம் பத்திரமாய் சுமந்த தாயை, முதுமையின் காரணமாக முதியோர்
இல்லத்தில் விடுவது நியாயமா?
எமது தளத்தை பார்வையிட்டோர்
Sunday, May 11, 2014
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
ஐ.பி.எல் தொடரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிகளுக்கு இடையிலான லீக் போட்டியொன்று நேற்று முன்தினம் இடம்பெற்றது. ப...
-
இரத்தினபுரி இலுக்புலுவ பகுதியில் மனைவியால் கூரிய ஆயுதததால் தாக்கப்பட்டு, கணவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
-
கல்முனைக்குடி முஹைதீன் ஜும்ஆப் பள்ளிவாசலின் வடக்குப் பகுதியில் அமைக்கப்பட்டு வருகின்ற வாகனத் தரிப்பிட நிர்மாணப் பணிகளுக்கு கல்முனை மாவட்ட நீ...
-
அளுத்கம நகரிலுள்ள வர்த்தக கடை தொகுதியொன்றில் இன்று அதிகாலை தீ விபத்தொன்று ஏற்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
Leave A Reply