blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Saturday, May 10, 2014

குளவிக் கொட்டுக்கு இலக்கான 20 பேர் வைத்தியசாலையில்


குளவிக் கொட்டுக்கு இலக்கான 20 பேர் வைத்தியசாலையில்…ஹட்டன் மற்றும் நோர்வூட் பகுதிகளில் குளவிக்கொட்டுக்கு இலக்கான   20 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குளவிக்கொட்டுக்கு இலக்காகியவர்கள் டிக்கோய ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருவதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நோர்வூட்டு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெஞ்சர் தோட்டத்தில் தேயிலை கொழுந்து பறித்துக் கொண்டிருந்த 6 பேர் குளவிக்கொட்டுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்..
இதேவேளை, ஹட்டன் டிக்கோயா தோட்டத்தில் தேயிலைக் கொழுந்து பறித்துக்கொண்டிருந்த 12 பேரும் வீதியால் பயணித்த இரு சிறுவர்களும் குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.
குளவிக்குகொட்டுக்கு இலக்காகியவர்களில்   16 பெண்களும் உள்ளடங்குவதாக எமது பிராந்திய செய்தியளார் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►