blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Monday, May 5, 2014

சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம்

கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சேனைகுடியிருப்பு கிராமத்தில் 7 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் கைதான 18 வயது இளைஞனை எதிர்வரும் 16 திகதி வரை
விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

மேற்படி பிரதேசத்தைச் சேர்ந்த சிறுமி துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாக கடந்த மாதம் 27 ஆம் திகதி கல்முனை பொலிஸ் நிலையத்தில் உறவினர்களால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து கல்முனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஏ.டபிள் யு.ஏ.கப்பாரின் வழிகாட்டலில் பெரும் குற்றத்தடுப்பு பொலிஸாரினால் தேடப்பட்டு வந்த மேற்படி சந்தேக நபர் ஞாயிற்றுக்கிழமை சேனைகுடியிருப்பு கிராமத்தில் வைத்து கைதுசெய்யப்படடார்.

பொலிஸார் குறித்த சந்தேக நபரை கல்முனை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்திய நிலையில் பதில் நீதிவான் எஸ்.பேரின்பராசா எதிர்வரும் 16ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

சிறுமி கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சைப்பெற்று வருகின்றார்.

No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►