blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Monday, May 5, 2014

இலங்கையில் புகைப்பிடிப்பால் நாளொன்றுக்கு 60 பேர் உயிரிழப்பு

நாட்டில் புகைப்பிடித்தலினால் சராசரியாக நாளொன்றுக்கு 60 பேர் வரையிலும் வருடமொன்றுக்கு 21870 பேர் வரையிலும் உயிரிழப்பதாக மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையத்தின் செயற்றிட்ட அதிகாரி றஹீம் தெரிவித்துள்ளார்.
புகைப்பிடித்தலை கட்டுப்படுத்துவது தொடர்பில் மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர்களுடனான கலந்துரையாடலின் போதே அவர் இதனை தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,

மதுபாவனை மற்றும் புகைப்பிடித்தல் என்பன நாளுக்கு நாள் அதிகரித்து வருவதையே காணக்கூடியதாகவுள்ளது. இவற்றைக் கட்டுப்படுத்த அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொண்டாலும் சிகரட் மற்றும் மது பாவனையை முழமையாக கட்டுப்படுத்த முடியாதுள்ளது.

சிகரட் பாவனையால் அரசாங்கத்திற்கு வருடமொன்றுக்கு 200 மில்லியன் இலாபமாக கிடைக்கின்றது. இதனை கட்டுக்குள் கொண்டுவர வெகுசன ஊடகங்களின் பங்களிப்பு அவசியமானதாகவுள்ளது.

புகைப்பிடித்தலுக்கு அடிமையான ஒரு சிலரால் மலங்கழிக்க செல்லும் போது கூட சிகரட் இல்லாமல் செல்ல முடிவதில்லை. 28 ரூபாயை சிகரட் கம்பனிகளுக்காக செலவழித்தால் தான் நிம்மதியாக மலங்கழிக்க முடியுமென்ற மனநிலையை அவர்களாகவே உருவாக்கிக்கொண்டுள்ளனர்.

சிகரட் மற்றும் மது பாவனைக்கு அடிமையானவர்கள் இல்லாத ஒரு சுகத்தை இருக்கின்றது என கூறி தாம் ஏமாறுவது மட்டுமல்லாமல் தங்களது ஏமாற்று வலையில் மற்றையோரையும் சிக்க வைக்கின்றனர் என்றார்.

No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►