blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Monday, May 5, 2014

மன்னாரில் நாளை இடம்பெறவுள்ள பட்டதாரிகளுக்கான ஆவண பரிசீலனை ரத்து

மன்னாரில் நாளைய தினம் இடம்பெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த பட்டதாரிகளின் மேன்முறையீட்டு ஆவண பரிசீலனை ரத்து செய்யப்பட்டுள்ளதாக மேலதிக அரசாங்க அதிபர் தெரிவத்துள்ளார்.
அரச சேவையில் பட்டதாரிகளை உள்வாங்கும் பொருட்டு 30.03.2012 இற்கு முன் பட்டம் பெற்றவர்களின் ஆவண பரிசீலனை நாளை இடம்பெறும் என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது.இந்நிலையில் குறித்த ஆவண பரிசீலனை ரத்து செய்யப்பட்டுள்ளதாக மேலதிக அரசாங்க அதிபர் திருமதி நந்தினி ஸ்ரான்லி டிமெல் அறிவித்துள்ளார்.

உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளரினால் தெரிவிக்கப்பட்ட அறிவுறுத்தலுக்கமையவே குறித்த ஆவண பரிசீலனை ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், அது தொடர்பில் பின்னர் அறிவிக்கப்படும் எனவும் மேலதிக அரசாங்க அதிபர் மேலும்; தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►