இலங்கை தொடர்பான அமெரிக்க நிலைப்பாட்டில் மாற்றம் தெரிவதாக வெளியான செய்திகளை அமெரிக்கா நிராகரித்துள்ளது.
அமெரிக்காவின் இலங்கை தொடர்பான நிலைப்பாட்டில் தளர்ச்சி தெரிவதை அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் ஜோன் கெரியுடனான சந்திப்பின்போது தான் உணர்ந்தார் என அமைச்சரவை கூட்டத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார் என வெளியான செய்திகளையே அமெரிக்கா நிராகரித்துள்ளது.
இது தொடர்பாக அமெரிக்காவின் வெளிவிவகார பேச்சாளர் ஜென் சகி தெரிவித்துள்ளதாவது:-
இலங்கை ஊடகங்களில் வெளியான தகவல்களில் ஒரு விடயம் மாத்திரம் சரியானது. வெளிவிவகார அமைச்சர் ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் கூட்டத் தொடரின்போது இலங்கை ஜனாதிபதியை சந்தித்தார்.
இலங்கை தொடர்பான அமெரிக்க கொள்கையில் மாற்றமெதுவும் இல்லை என்ற நோக்கத்தை தெரியப்படுத்தும் நோக்குடனேயே இந்த சந்திப்பு இடம்பெற்றது.
நிச்சயமாக இலங்கை தொடர்பான கொள்கையில் தளர்ச்சியேற்படவுமில்லை. இலங்கையுடனான எமது உறவு முழுமையாக வளர்ச்சி காணவேண்டும் என நாங்கள் விரும்புகிறோம்.
இலங்கை தனது பல தரப்பட்ட இன, மத குழுக்களுக்கு நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்திக்கொடுத்தாலே சாத்தியமாகும்.
இதன் காரணமாகவே இலங்கை தொடாந்தும் யுத்தத்தில் ஈடுபட்டிராத நாடு என்பதை காண்பிக்கும விதத்திலான அர்த்தபூர்வமான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என கெரி வலியுறுத்தினார். - என்று தெரிவித்துள்ளார்.
எமது தளத்தை பார்வையிட்டோர்
Friday, October 3, 2014
இலங்கை தொடர்பான தனது நிலைப்பாட்டில் மாற்றம் என்ற செய்தியை நிராகரித்தது அமெரிக்கா!!
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
ஐ.பி.எல் தொடரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிகளுக்கு இடையிலான லீக் போட்டியொன்று நேற்று முன்தினம் இடம்பெற்றது. ப...
-
இலங்கை தொடர்பான அமெரிக்க நிலைப்பாட்டில் மாற்றம் தெரிவதாக வெளியான செய்திகளை அமெரிக்கா நிராகரித்துள்ளது.
-
அம்பாறை மாவட்டத்தின் பெரியநீலாவணை சவக்காலைக்கு அருகிலிருந்து பெரியநீலாவணையை பிறப்பிடமாகவும் வீரமுனையை வசிப்பிடமாகவும கொண்ட எஸ்.ராமசந்திர...
-
மைத்திரியை வெற்றி பெற வைப்பதற்காக ஆயிரக்கணக்கான முச்சக்கர வண்டி சாரதிகள் தமது வாகனத்தில் ‘மைத்திரி தினவண்ட ஜயவேவா’ என வண்டிகளை காட்சிப்படுத்...
No comments:
Post a Comment
Leave A Reply