சமீபத்தில்
முதல்வர் ஜெயலலிதா கைது சம்பவம் தமிழ் நாட்டையே அதிர்ச்சியாக்கியுள்ளது.இந்நிலையில் தற்போது வந்த செய்தி ஒன்று அனைவரையும் அதிர்ச்சியின் உச்சக்கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளது.
ஜெயலலிதாவின் வாழ்க்கை கதை ஐந்து மொழிகளில் படமாக உருவாகி வருகிறது. இப்படத்துக்கு ‘அம்மா’ என்று தலைப்பு வைத்துள்ளனர்.
பைசல் சைஃப் இயக்கும் இப்படத்தில் ஜெயலலிதா கதப்பாத்திரத்தில் ராகினி திவேதி நடிக்கிறார்.
கன்னடம், மலையாளப் படங்களில் நடித்தவர் ராகினி திவேதி. தமிழில் ‘நிமிர்ந்து நில்’ படத்தில் நடித்திருக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு 80% முடிவடைந்த நிலையில் இன்னும் 15 நாள் தான் ஷுட்டிங் உள்ளதாம்.
இதை தொடர்ந்து ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை சென்றதால், இதையும் படத்தின் இறுதிக்காட்சியில் சேர்க்க இருக்கிறார்களாம்.
No comments:
Post a Comment
Leave A Reply