எமது தளத்தை பார்வையிட்டோர்
Friday, October 3, 2014
அமெரிக்க அரசியல்வாதிகளை விட மோடிக்கு அமெரிக்க பேஸ்புக் இரசிகர்கள் மிக அதிகம்
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு, அமெரிக்காவின் பிரபல அரசியல்வாதிகள், அதிகார மட்டம், கவர்னர்கள், காங்கிரஸ், செனட் உறுப்பினர்களை விட அதிக பேஸ்புக் இருப்பதாக தெரியவந்துள்ளது.
அமெரிக்காவின் சமூக வலைத்தள பின் தொடர்பவர்களின் தகவலைத் திரட்டும் அமைப்பு சோசியல்பேக்கர்ஸ், மோடிக்கு அமெரிக்க பேஸ்புக் இரசிகர்கள் நேற்றைய நிலவரப்படி, 1,70,529 பேர் என தெரிவித்துள்ளது.
இது அமெரிக்க பிரபல்யங்களான நியூ ஜெர்ஸி கவர்னர் கிறிஸ் கிறிஸ்டி, நிவேடாவைச் சேர்ந்த எதிர்வரும் ஜனாதிபதி வேட்பாளரும் செனட்டின் செல்வாக்கு பெற்ற தலைவருமான ஹாரி ரீடைவிட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கு, மோடியின் தேர்தல் கால சமூக வலைத்தள பிரசாரம் ஒரு காரணம் என்றாலும், சமூக வலைத்தளங்களை மிகவும் நுட்பமாகவும் சமயோசிதமாகவும் அவர் பயன்படுத்திய விதம் முக்கியமானது என்று சோசியல் பேக்கர்ஸ் குறிப்பிடுகிறது.
மேலும், ஞாயிறு அன்று மேடிசன் சதுக்கத்தில் மோடிக்கு அமெரிக்க வாழ் இந்தியர்கள் அளித்த மாபெரும் வரவேற்பைப் போல் அண்மைக் காலங்களில் நடந்திராதது, அவருக்கு அமெரிக்காவில் வளர்ந்து வரும் செல்வாக்கைக் காட்டுவதாக அது தெரிவிக்கிறது.
மேலும், மோடியுடன் மேடிசன் சதுக்கத்தில் நடந்த வரவேற்பு நிகழ்வில் கலந்து கொண்ட அமெரிக்க அரசியல்வாதிகளும் அதனால் பெரும் பயன் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 8 பேரில் 6 பேருக்கு, டிவிட்டர் பக்கத்தில் அதிக அளவில் புதிய இரசிகர்கள் கிடைத்துள்ளனர்.
உலக அளவில் பேஸ்புக் இரசிகர்கள் அதிகம் உள்ளவர்களின் பட்டியலில் இரண்டாவது இடம் பிடித்துள்ள மோடிக்கு அதிக அளவிலான இரசிகர்கள் இந்தியாவில் உள்ளவர்கள் என்று கூறும் அந்த அமைப்பு, மோடிக்கு 21 பிற நாடுகளில் இருந்து 10 ஆயிரத்துக்கும் அதிகமான இரசிகர்கள் உள்ளனர் என்று கூறுகிறது.
அவற்றில் பாகிஸ்தான், எகிப்து, பிலிப்பின்ஸ் ஆகிய நாடுகளும் அடக்கம்.
மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் படி, அமெரிக்காவில் 3.3 மில்லியன் மக்கள் தங்களை இந்திய வம்சாவளியினர் என்று கூறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
ஐ.பி.எல் தொடரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிகளுக்கு இடையிலான லீக் போட்டியொன்று நேற்று முன்தினம் இடம்பெற்றது. ப...
-
இலங்கை தொடர்பான அமெரிக்க நிலைப்பாட்டில் மாற்றம் தெரிவதாக வெளியான செய்திகளை அமெரிக்கா நிராகரித்துள்ளது.
-
அம்பாறை மாவட்டத்தின் பெரியநீலாவணை சவக்காலைக்கு அருகிலிருந்து பெரியநீலாவணையை பிறப்பிடமாகவும் வீரமுனையை வசிப்பிடமாகவும கொண்ட எஸ்.ராமசந்திர...
-
மைத்திரியை வெற்றி பெற வைப்பதற்காக ஆயிரக்கணக்கான முச்சக்கர வண்டி சாரதிகள் தமது வாகனத்தில் ‘மைத்திரி தினவண்ட ஜயவேவா’ என வண்டிகளை காட்சிப்படுத்...
No comments:
Post a Comment
Leave A Reply